முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை

Cooking time in minutes: 
20
Ingredients: 

உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை செய்யத்தேவையான பொருட்கள்.

  1. போன்லெஸ் சிக்கன் - 400 கிராம்.
  2. உருளைக்கிழங்கு - 100 கிராம். 
  3. மிளகு தூள் – ஒரு ஸ்பூன்.
  4. சீரக தூள் - ஒரு ஸ்பூன்.
  5. கரம் மசாலா தூள் - ஒரு ஸ்பூன்.
  6. இஞ்சி,பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்.
  7. மிளகாய் தூள் - ஒரு ஸ்பூன்.
  8. பால் - 60 மில்லி.
  9. கார்ன் பிளவர் மாவு - 3 ஸ்பூன்.
  10. உப்பு - தேவையான அளவு.
  11. எண்ணெய் – 1/2 லிட்டர்.
Method: 

செய்முறை ;--

  1. ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய 400 கிராம் போன்லெஸ் சிக்கனை எடுத்துக்கொள்ளவும்.
  2. இதனுடன் ஒரு ஸ்பூன் மிளகு தூள்,சீரக தூள் ஒரு ஸ்பூன்,கரம் மசாலா தூள் ஒரு ஸ்பூன்,இஞ்சி,பூண்டு விழுது ஒரு ஸ்பூன்,மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்,கார்ன் பிளவர் மாவு 3 ஸ்பூன்,மற்றும் 60 மில்லி பால் ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலந்து விட்டு  சிக்கனை 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  3. 100 கிராம் உருளைக்கிழங்கை எடுத்து சிப்ஸ் கட்டையால் சீவி வைத்துக்கொள்ளவும்.
  4. சிப்ஸ் போல் சீவி வைத்த உருளைக்கிழங்கு துண்டின் நடுவில் ஒரு சிக்கன் துண்டை வைத்து மடக்கி ஒரு குச்சியை வைத்து குத்தி தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
  5. அடுப்பில் கடாயை வைத்து 1/2 லிட்டர் எண்ணெய்யை ஊற்றவும்.
  6. எண்ணெய்  சூடானவுடன்  தயார் செய்து வைத்துள்ள சிக்கனை எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
  7. திருப்பி திருப்பி போட்டு நன்றாக பொரிக்கவும்.
  8. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  9. சுவையான உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 4 days ago