முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

ஆனியன்ப்ரை

Cooking time in minutes: 
20
Ingredients: 

ஆனியன்ப்ரை செய்யத்தேவையான பொருட்கள்.

  1. மைதா மாவு - 150 கிராம்.
  2. கார்ன் பிளவர் மாவு - 25 கிராம்.
  3. கரம் மசாலா தூள் - ஒரு டீஸ்பூன்.
  4. சீரக தூள் - ஒரு டீஸ்பூன்.
  5. மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்.
  6. மிளகு தூள் – ஒரு டீஸ்பூன்.
  7. மஞ்சள் தூள் – ஒரு ஸ்பூன்.
  8. உப்பு - தேவையான அளவு.
  9. பேக்கிங் பவுடர் - ஒரு ஸ்பூன்.
  10. முட்டை - 2.
  11. பெரிய வெங்காயம் - முக்கால் கிலோ.
  12. மல்லி இலை - சிறிதளவு.
  13. எண்ணெய் – 1/2 லிட்டர்.
Method: 

செய்முறை ;--  

  1. ஒரு பாத்திரத்தில் 150 கிராம் மைதா மாவு,கார்ன் பிளவர் மாவு 25 கிராம்,கரம் மசாலா தூள் ஒரு டீஸ்பூன்,சீரக தூள் ஒரு டீஸ்பூன்,மிளகாய் தூள் ஒரு டீஸ்பூன்,மிளகு தூள் ஒரு டீஸ்பூன்,மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன்,பேக்கிங் பவுடர் ஒரு டீஸ்பூன்போட்டு 2 முட்டையை உடைத்து ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
  2. இதனுடன்  பொடியாக நறுக்கிய முக்கால் கிலோ பெரிய வெங்காயம் மற்றும் சிறிதளவு மல்லி இலையை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
  3. அடுப்பில் கடாய் வைத்து 1/2 லிட்டர்  எண்ணெய்யை ஊற்றவும்.
  4. எண்ணெய்  சூடானவுடன் தயார் செய்து வைத்துள்ள மாவை போட்டு பொரிக்கவும்.
  5. திருப்பி திருப்பி போட்டு நன்றாக பொறித்து எடுக்கவும்.
  6. சுவையான ஆனியன்ப்ரை ரெடி.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்