முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.எஸ்.கே - பஞ்சாப் அணிகள் மோதும் ஐ.பி.எல். போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது

ஞாயிற்றுக்கிழமை, 28 ஏப்ரல் 2024      விளையாட்டு
IPL-2024-04-28

சென்னை, சி.எஸ்.கே. - பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெறும் ஐ.பி.எல். போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று (ஏப்.29-ல்) தொடங்க உள்ளது.

10 அணிகள்...

டாடா ஐ.பி.எல். 17வது சீசன் போட்டி மார்ச் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கதில் தொடங்கி மே 26-ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதில் சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், டெல்லி, பஞ்சாப், குஜராத், லக்னோ, ராஜஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

2 போட்டிகள்...

இந்நிலையில் நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்றது. முதல் போட்டியில் டெல்லி  கேபிடல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடின. இதையடுத்து, இரண்டாவது போட்டியில் லக்னோவில் உள்ள ஏகானா ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் நேற்று மாலை 7.30 மணியளவில் நடைபெற உள்ளது. இதில், லக்னோ சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடின.

ஆன்லைன் மூலம்... 

இதையடுத்து, சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில்  மே 01 ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோத உள்ளன. இந்த போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை, இன்று (29ம் தேதி) தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ்  அணிகளுக்கு இடையேயான போட்டிக்கான டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 டிக்கெட் மட்டுமே... 

சென்னை-பஞ்சாப் இடையிலான ஆட்டத்துக்குரிய டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் இன்று (திங்கட்கிழமை) காலை 10.40 மணிக்கு தொடங்கி நடைபெறும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் நிறுவனம் அறிவித்துள்ளது. பேடிஎம்.மற்றும் www.insider.in ஆகிய இணையதளத்தின் வாயிலாக டிக்கெட்டுகளை பதிவு செய்து பெறலாம் என்றும் ஒருநபருக்கு 2 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.1,700, ரூ.2,500, ரூ.3,500, ரூ.4 ஆயிரம், ரூ.6 ஆயிரம் ஆகிய விலைகளில் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து