முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ருத்ரதாண்டவம் ஆடிய வில் ஜேக்ஸ்: குஜராத்தை வீழ்த்தியது பெங்களூரு

ஞாயிற்றுக்கிழமை, 28 ஏப்ரல் 2024      விளையாட்டு
Virat-Kohli 2023-10-02

அகமதாபாத், வில் ஜேக்ஸ், விராட் கோலி அபார பேட்டிங்கில் குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு வெற்றி பெற்றது.

2 லீக் ஆட்டங்கள்... 

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று 2 லீக் ஆட்டங்கள் நடந்தன. இதில் மாலை அகமதாபாத்தில் நடைபெற்ற 45வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி , குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது தொடக்க வீரர்களாக சுப்மன் கில் , சஹா ஆகியோர் களமிறங்கினர். 

சாய் சுதர்சன் அதிரடி... 

தொடக்கத்தில் 5 ரன்களிலும் , கில் 16 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் சாய் சுதர்சன் , ஷாருக்கான் இருவரும் இனணந்து சிறப்பாக ஆடி ரன்கள் குவித்தனர்.பெங்களூரு அணியின் பந்துவீச்சை இருவரும் பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்டனர். தொடர்ந்து அதிரடி காட்டிய சாய் சுதர்சன் , ஷாருக்கான் இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். தொடர்ந்து ஷாருக்கான் 30 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அரைசதம் கடந்த பிறகும் சாய் சுதர்சன் தொடர்ந்து அதிரடியாக விளையாடினார்.இறுதியில் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்தது. சாய் சுதர்சன் 49 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தார்.தொடர்ந்து 201 ரன்கள் இலக்குடன் பெங்களூரு அணி விளையாடியது.

இருவரும் அரைசதம்... 

தொடக்க வீரர்களாக டு பிளசிஸ் , விராட் கோலி ஆகியோர் களமிறங்கினர். தொடக்கத்தில் டு பிளசிஸ் 24 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து வில் ஜேக்ஸ் களமிறங்கினார்.விராட் கோலி , வில் ஜேக்ஸ் இருவரும் இணைந்து சிறப்பாக ஆடினர். குஜராத் அணியின் பந்துவீச்சை இருவரும் துவம்சம் செய்தனர். தொடர்ந்து அதிரடி காட்டிய விராட் கோலி , வில் ஜேக்ஸ் இருவரும் அரைசதம் அடித்தனர். அரைசதம் கடந்த பிறகு ருத்ரதாண்டவம் ஆடிய வில் ஜேக்ஸ் தொடர்ந்து சிக்சர்களை பறக்க விட்டார். அவர் 41 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.இறுதியில் 16 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு  அபாரவெற்றி பெற்றது.

கோலி புதிய சாதனை 

குஜராத் டைட்டன்சுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி , வில் ஜேக்ஸ் இருவரும் இணைந்து சிறப்பாக ஆடினர். குஜராத் அணியின் பந்துவீச்சை இருவரும் துவம்சம் செய்தனர். இறுதியில், பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது. வில் ஜாக்ஸ் 41 பந்தில் 10 சிக்சர், 5 பவுண்டரியுடன் சதமடித்து அசத்தினார். விராட் கோலி 70 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் 500 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனை படைத்துள்ளார் விராட் கோலி. இவர் 10 போட்டிகளில் விளையாடி 501 ரன்கள் குவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து