முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு

ஞாயிற்றுக்கிழமை, 5 மே 2024      உலகம்
London 2024-05-04

Source: provided

லண்டன் : லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு பெற்றார்.

பிரிட்டனில் விரைவில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன் லண்டன் மேயரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதில் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்தவரும் தற்போது மேயராக இருப்பவருமான சாதிக்கான் அதிக வாக்குகளைப் பெற்று மீண்டும் மேயராக தேர்வு செய்யப்பட்டார்.

பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த சாதிக்கான் கடந்த 2016-ம் ஆண்டு முதல் இரண்டு முறை மேயராக இருந்த நிலையில் மூன்றாவது முறையாக மீண்டும் மேயராக தேர்வு பெற்றுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து