முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு

திங்கட்கிழமை, 6 மே 2024      சினிமா
Aamir 2024-05-06

Source: provided

மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு. அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் அமீர் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக சாந்தினி நடித்துள்ளார்.

இவர்களுடன் ஆனந்த்ராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ்கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். இசை வித்யாசாகர். வரும் வெள்ளியன்று வெளியாகும் இப்படத்தினை Pvr inox பிக்சர்ஸ் தமிழகமெங்கும் வெளியிடுகிறது.  இந்த நிலையில் இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றது. நிகழ்வில் பேசிய அமீர், சமூகத்தை சீரழிப்பது போதை. அதை நான் வெறுக்கிறேன்.

என்னுடைய உதவியாளர்கள் சிகரெட் பிடித்தாலே என்னுடைய அலுவலகத்திற்குள் நுழைய விட மாட்டேன். அப்படி நான் வெறுக்கின்ற ஒரு விஷயத்தில் என்னை தொடர்புப்படுத்தும் போது, அது என்னை மட்டும் அல்ல அதனால் என்னுடைய குடும்பத்தையும் பாதிக்கிறது என்றார். இந்த படம் பற்றி பேசிய அமீர், பெரிய கலை நயத்துடன் காவியமாக இப்படம் இருக்கும் என்று எதிர்பார்த்து வர வேண்டாம். ஆனால் இப்படம் உங்களை ஜாலியாக சிரிக்க வைக்கும் என்பது மட்டும் உறுதி என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து