முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்து தனது மருமகனை நீக்கினார் மாயாவதி

புதன்கிழமை, 8 மே 2024      இந்தியா
Mayavati 2023 07 02

லக்னோ, ஆகாஷ் ஆனந்தை தனது அரசியல் வாரிசாக அறிவித்ததை திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும், "அவர் அரசியல் ரீதியாக முதிர்ச்சி அடையும் வரை" கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது அண்ணன் மகனான ஆகாஷ் ஆனந்தை தனது அரசியல் வாரிசாகவும், கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் மாயாவதி அறிவித்திருந்தார். நாடு முழுவதும் கட்சி பலவீனமாக உள்ள இடங்களில் வலுப்படுத்தும் பொறுப்பை கவனித்துக்கொள்வார் என்று மேலும் தெரிவித்தார்.

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாத இறுதியில் சீதாபூரில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பிரசார பேரணியின்போது ஆகாஷ் ஆனந்த் ஆட்சேபகரமான வார்த்தைகளை பயன்படுத்தியதாகவும், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக ஆகாஷ் மற்றும் நான்கு பேர் மீது ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து ஆகாஷ் ஆனந்தின் அனைத்து பிரசார பேரணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில், மருமகன் ஆகாஷ் ஆனந்தை தனது அரசியல் வாரிசாக அறிவித்ததை திரும்ப பெற்றுக்கொள்வதாக அறிவித்துள்ள மாயாவதி, அவர் ‘அரசியல் ரீதியாக முதிர்ச்சி அடையும் வரை’ கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்படுவதாக என்று அறிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து