முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இம்ரான்கான் உள்ள அடியாலா சிறைக்கு அவரது மனைவி பூஸ்ரா பீபி மாற்றம்

வியாழக்கிழமை, 9 மே 2024      உலகம்
Imran-Khan-2024-05-09

கராச்சி, இம்ரான் கான் உள்ள அடியாலா சிறைக்கு அவரது மனைவி பூஸ்ரா பீபி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், பல்வேறு ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு உள்ளார்.  இந்நிலையில், இஸ்லாமிய நடைமுறைக்கு எதிரான திருமணம் செய்தது தொடர்பான வழக்கில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி பூஸ்ரா பீபிக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

இம்ரான் கான் மனைவி, வீட்டு சிறையில் வைக்கப்பட்டார்.  எனினும், வீட்டில் கெட்டு போன உணவை வழங்கினர் என பூஸ்ரா பீபி குற்றச்சாட்டு கூறியதுடன், பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு தன்னை சிறைக்கு கொண்டு செல்லும்படி அவர் கேட்டு கொண்டார். 

இதனை தொடர்ந்து, பாகிஸ்தானில் உள்ள கோர்ட்டு ஒன்று அவருடைய கோரிக்கையை ஏற்று சிறைக்கு செல்ல ஒப்புதல் அளித்துள்ளது.  இதனை அவருடைய வழக்கறிஞர் கூறியுள்ளார்.  இதனால், வீட்டு காவலில் வைக்கும்படி அரசு உத்தரவிட்டதற்கு பதிலாக அவர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதன்படி, ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறைக்கு அவர் மாற்றப்பட்டு உள்ளார்.  இந்த சிறையிலேயே இம்ரான் கான் 14 வருட சிறை தண்டனையை முன்னிட்டு அடைக்கப்பட்டு இருக்கிறார்.  எனினும், கெட்டு போன உணவை அதிகாரிகள் வழங்கினர் என்ற குற்றச்சாட்டை அவர்கள் மறுத்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து