முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிரடியான பேட்டிங்: டிராவிஸ் ஹெட்

வியாழக்கிழமை, 9 மே 2024      விளையாட்டு      தேர்தல்
9-Ram-52

Source: provided

ஐபிஎல் லீக் ஆட்டத்தில் 57ஆவது போட்டியில், லக்னெள அணி நிர்ணயித்த 166 என்ற வெற்றி இலக்கை,9.4 ஓவர்களில் கடந்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது சன் ரைசர்ஸ் அணி. சன் ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் டிராவிஸ் ஹெட் 89* (30) ரன்கள், அபிஷேக் சர்மா 75* (28) ரன்கள் குவித்தனர். டிராவிஸ் ஹெட் ஆட்ட நாயகன் விருதினை பெற்றார். 16 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தின டிராவிஸ் ஹெட்டை பிரபல இணையத்தொடர் நாயகனுடன் ஒப்பிட்டு ஹெட் மாஸ்டர் என ஐதராபாத் புகழ்ந்துள்ளது.

ஆட்ட நாயகன் விருது பெற்ற டிராவிஸ் ஹெட் பேசியதாவது.,  10 ஓவர்களில் ஆட்டத்தை முடித்தது நன்றாக இருந்தது. அபியும் நானும் இதுபோல சில பார்ட்னர்ஷிப்புகள் கொண்டுள்ளோம். நல்ல நிலையில் நின்றுகொண்டு பந்தினை பார்த்து அடிப்பது மட்டுமே எங்களது நோக்கமாக இருந்தது. முடிந்த அளவுக்கு பவர் ஃபிளேவை உபயோகிக்க வேண்டும். ஸ்பின்னர்களை அடிப்பதற்காக தனியாக பயிற்சி எடுத்து வருகிறேன். மே.இ.தீவுகளிலும் இது எனக்கு உதவும் என நம்புகிறேன். இந்த புதுமையான காலத்தில் 360 கோணத்திலும் அடிப்பது முக்கியம். கடைசி 12 மாதங்களில் நான் ஆஸ்திரேலியாவுக்காக எப்படி ஆட சொன்னார்களோ அதையேதான் இங்கும் ஆடுகிறேன். பெரிதாக எதையும் மாற்றவில்லை. ஸ்பின்னர்களை அபிஷேக் மாதிரி யாரும் ஆடுவதில்லை என்றார்.

லக்னோ கேப்டன் ராகுல் அதிர்ச்சி

ஐபிஎல் லீக் ஆட்டத்தில் 57ஆவது போட்டியில், லக்னெள அணி நிர்ணயித்த 166 என்ற வெற்றி இலக்கை,9.4 ஓவர்களில் கடந்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது சன் ரைசர்ஸ் அணி. இவ்வளவு மோசமான தோல்வியை சந்தித்த கே.எல்.ராகுல் கேப்டன்சி (தலைமைப் பண்பு) கேள்விக்குறியாகியுள்ளது. தோல்வி குறித்து லக்னௌ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் கூறியதாவது: வார்த்தைகள் கிடைக்கவில்லை. இந்த மாதிரியான பேட்டிங்கை தொலைக்காட்சிகளில்தான் பார்த்திருக்கிறோம். இது நம்பமுடியாத பேட்டிங். எல்லா பந்துகளையும் நடு பேட்டில் அடிக்கிறார்கள். அவர்களது திறமைக்கு பாராட்டுகள். 

சிக்ஸ் அடிக்கும் திறமைகளை வளர்த்துக்கொண்டு இருக்கிறார்கள். 2ஆவது இன்னிங்ஸில் ஃபிட்ச் வேறு மாதிரி இருந்தது. அவர்களை விக்கெட் எடுக்க வாய்ப்பே வழங்கவில்லை. முதல் பந்திலிருந்தே எங்களை அடித்து நொருக்கினார்கள். தோல்வியின் பக்கம் இருக்கும்போது முடிவுகள் எடுத்தது குறித்து நிறைய கேள்விகள் இருக்கும். 40-50 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். பவர் ஃபிளேவில் விக்கெட்டுகளை விட்டதால் எங்களால் திரும்பவும் நல்ல கணத்தை கொண்டுவர முடியவில்லை. ஆயுஷ், நிகோலஸ் பூரன் நன்றாக விளையாடி 166 கொண்டு வந்தார்கள். 240 அடித்திருந்தாலும் ஹைதராபாத் சேஸிங் செய்திருப்பார்கள் என்றே தோன்றுகிறது எனக் கூறினார்.

கே.எல். ராகுலை திட்டிய உரிமையாளர்

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான மோசமான தோல்வியை தொடர்ந்து, லக்னெள அணியின் கேப்டன் கே.எல்.ராகுலுடன் அணியின் உரிமையாளர் காட்டமாக விவாதிக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. ஐபிஎல் லீக் ஆட்டத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்ற போட்டியில், லக்னெள அணி நிர்ணயித்த 166 என்ற வெற்றி இலக்கை, 10 ஓவர்களில் கடந்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது சன் ரைசர்ஸ் அணி. அடுத்தடுத்து இரு தோல்விகளால் புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ள லக்னெள அணியின் ரன்ரேட்டும் மோசமாக குறைந்துள்ளது.

அடுத்து வரும் இரு போட்டிகளிலும் வென்றால்தான், லக்னெள அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு கிடைக்கும். இந்த நிலையில், போட்டி முடிந்தவுடன் மைதானத்தில் வைத்து அனைவரின் முன்னிலையிலும் ராகுலை அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா காட்டமாக பேசியுள்ளார். இந்த காட்சிகள் நேரலையில் வந்த நிலையில், இணையத்தில் கே.எல்.ராகுலின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர். எதுவாக இருப்பினும், ஒரு அணியின் கேப்டனை அனைவரின் முன்னிலையிலும் இவ்வாறு தரக்குறைவாக நடத்துவது நல்லதுக்கல்ல என்றும், அடுத்தாண்டு கே.எல்.ராகுல் வேறு அணிக்கு மாற வேண்டும் என்றும் ரசிகள் பதிவிட்டு வருகின்றனர்.

மனம் திறந்த அபிஷேக் சர்மா

பாட் கம்மின்ஸ் மற்றும் அணியில் உள்ள அனைவரிடத்திலிருந்தும் அதிக ஆதரவு கிடைப்பதால் வெற்றிகரமாக செயல்பட முடிவதாக சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா தெரிவித்துள்ளார். போட்டியில் முதலில் பேட் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது. 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய சன் ரைசர்ஸ் ஐதராபாத் விக்கெட் இழப்பின்றி வெறும் 9.4 ஓவர்களில் இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் 89 ரன்களும், அபிஷேக் சர்மா 75 ரன்களும் எடுத்து அசத்தினர்.

இந்த நிலையில், பாட் கம்மின்ஸ் மற்றும் அணியில் உள்ள அனைவரிடத்திலிருந்தும் அதிக ஆதரவு கிடைப்பதால் வெற்றிகரமாக செயல்பட முடிவதாக சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் அணியின் பயிற்சியாளர், உதவிப் பணியாளர்கள் யோசிப்பதைப் போன்று வேறு யாரும் யோசித்து நான் பார்த்ததில்லை. எனது இயல்பான ஆட்டத்தை மகிழ்ச்சியாக வெளிப்படுத்த அவர்கள் எனக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளார்கள். உன்னால் முடிந்தவரை அதிரடியாக விளையாடு என்ன ஆனாலும் பார்த்துக் கொள்ளலாம் என அவர்கள் எனக்கு ஆதரவு கொடுக்கிறார்கள். அவர்களது நிபந்தனையற்ற இந்த ஆதரவு என்னை வெற்றிகரமாக செயல்பட வைப்பதாக நினைக்கிறேன் என்றார்.

ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு: லாரா

உலகின் ஜாம்பவான்களில் ஒருவரான பிரையன் லாரா. இந்த சூழலில் தனது சாதனையை முறியடிக்கும் சிறந்த வாய்ப்பை இளம் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தெரிவிக்கையில் “கிரிக்கெட் உலகில் எனது சாதனைகளை முறியடிக்கும் சிறந்த வாய்ப்பை ஜெய்ஸ்வால் பெற்றுள்ளதாக நான் கருதுகிறேன். அவர் சிறந்த ஆட்டத்திறனை பெற்றுள்ளார். இரண்டு இரட்டை சதங்களை பதிவு செய்துள்ளார். சிறந்த வீரர். அவரை முதல் முறை பார்த்தபோது எனக்கு அவருடன் பிணைப்பு ஏற்பட்டது. அந்த முதல் சந்திப்பு ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு பிறகு ஒரு அதிகாலை நேரத்தில் நடந்தது. கேம் சார்ந்து கற்றுக் கொள்வதில் அதீத ஆர்வம் காட்டுவார். மிகவும் பணிவானவர். எங்களுடனான உரையாடல் அவரை சிறந்த கிரிக்கெட் வீரராக மாற்றும் வகையில் அமைந்தது. கிரிக்கெட் குறித்து பேசுவது என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்” என லாரா தெரிவித்துள்ளார்.

அதே போல இந்தியாவை சேர்ந்த மற்றொரு இளம் இடது கை பேட்ஸ்மேனான அபிஷேக் சர்மா வசமும் தனக்கு அபிமானம் உண்டு என லாரா தெரிவித்துள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் பயிற்சியாளராக பயணித்த போது அபிஷேக் சர்மாவுடன் புரிதல் கொண்ட பிணைப்பை கொண்டிருந்ததாக லாரா தெரிவித்துள்ளார். மேலும், தனது சாதனை முறியடிக்கப்படுவதை தான் பார்க்க விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து