முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள சுற்றுலா துறை வருவாய் ரூ.2000 கோடி அதிகரிப்பு

சனிக்கிழமை, 24 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

 

சென்னை, மார்ச்.24 - கேரள சுற்றுலா துறையில் ஏற்பட்ட வளர்ச்சி காரணமாக உள்நாடு மற்றும் வெளிநாட்டுப்பயணிகளின் வருகை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக கேரள சுற்றுலாதுறையின் வருவாய் கடந்த ஆண்டை விட ரூபாய் 2000 கோடி அதிகரித்துள்ளது. சென்னையில் கேரள சுற்றுலாத்துறையின் சார்பில் நடைபெற்ற விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன இந்த விழாவில் அளிக்கப்பட்ட விபரங்கள் வருமாறு:- கேரள மாநிலத்திற்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை 7.5 லட்சமாக அதிகரித்துள்ளது. முந்தைய 2010 ஆண்டில் இது 6.5 லட்சமாக இருந்தது முந்தைய ஆண்டில் 85.95 லட்சமாக இருந்த உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் வரத்து இந்த ஆண்டு 93 லட்சமாக அதிகரித்துள்ளது. 2010 ம் ஆண்டில் ரூ.3797.37 கோடியாக இருந்த அன்னியச் செலாவணி வருவாயும் ரூ.4221 கோடியாக உயர்ந்துள்ளது. இதே போல் சுற்றுலாவின் மூலம் கிடைக்கும் நேரடி மற்றும் மறைமுக வருவாய் முந்தைய ஆண்டில் இருந்த ரூ.17348 கோடியிலிருந்து ரூ.19037 கோடியாக அதிகரித்துள்ளது.

சுற்றுலாவின்  அனைத்தும் அம்சங்களுடனும் உலக வரைபடத்தில் தனக்கென ஒரு இடத்தை கேரள மாநிலம் கடந்த ஆண்டில் உருவாக்கிக் கொண்டது. இது இந்த ஆண்டிலும் தொடர்ந்து வளர்ச்சியைப் பெற்று வருகிறது டிஜிட்டல் புரட்சியின் சக்தியைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் கேரளா தன்னை ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் சிறப்பாக முன்னிலைப்படுத்திக் கொண்டுள்ளது.சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், சொத்து உரிமையாளர்கள், பயண முகமைகள் மற்றும் கூகுல் போன்ற தேடியந்திரங்கள் மற்றும்  வைஃபை, மொபைல் இன்டெர்னெட் போன்றவற்றின்  இணைப்பும் கேரளாவின் மீது வெளிநாடுகளில் ஓர் ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா டூரிசம் மேற்கொண்ட  இன்னொரு யுக்திசார்ந்த முயற்சியாக லண்டனில் அதிக மக்கள் கூடும்  காட்சி கேலரியில் யுவர் மொமெண்ட் இஸ் வெய்ட்டிங் என்ற வீடியோ விளம்பரம் அறிமுகப்படுத்தப்பட்டது. யூட்யூப் தளத்திலும் இதர ஊடகங்களில் இந்த வீடியோ பெற்றிருக்கும் பெரும்புகழ் இந்த முயற்சிக்கு கிடைத்திருக்கும் பெரும் வெற்றியைக்குறிப்பாக  அமைந்துள்ளது. ஏழாம் ஆண்டு கேரளா டிராவல் மார்ட், கேடிஎம் 2012 என்ற கண்காட்சி, செப்டம்பர் 27, 2012 முதல் செப்டம்பர் 30,2012 வரை கொச்சியில் உள்ள லி மெரிடியன் இன்டர்நேஷனல் கன்வென்ஷன் சென்டரில் நடத்தப்படுகிறது கேரளாவில் சுற்றுலா திட்டங்கள் மற்றும் சேவைகளை அளிக்கும் அனைத்தும் வர்த்தகர்கள் மற்றும் தொழில் முனைவோரை ஒன்றாகக் கொண்டு வருவதற்கான ஒரே சுற்றுலா தொடர்பான நிகழ்வாக இது திகழ்கிறது. வாங்குவோர் விற்போர் ஊடகம் அரசு முகமைகள்  மற்றும் இதர தரப்பினரை ஒரே இடத்தில் சந்திக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட, திட்டமிடப்பட்ட ஒரே நிகழ்வாக இந்த கண்காட்சி அமைந்துள்ளது. விசாகப்பட்டினம், புவனேஸ்வர், லக்னோ, குவாலியர், மைசூர், கோயம்புத்தூர், வதோதரா, புனே, ராய்ப்nullர் மற்றும் இன்தூர் ஆகிய இடங்களில் வெற்றிகரமான பங்குதாரர் சந்திப்புகள் நடத்தப்பட்டுள்ளன. மேலும் உற்நாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்காக முதல் அடுக்கு நகரங்களான சென்னை, பெங்களூர், தில்லி, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், அகமதாபாத், சண்டிகர், நாக்nullர், கோவா, மைசூர் உள்ளிட்ட நகரங்களில் இத்தகைய சந்திப்புகள் நடத்த திட்டமிட்டுள்ளன. இதுவரை நடத்தப்படாத புதிய நகரங்களிலும் இத்தகைய சந்திப்புகளை நடத்த கேரளா டூரிசம் திட்டமிட்டுள்ளது. அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் ஆஸ்திரேலியாவில் சிட்னி, மெல்பர்ன், நார்வேயில் ஆஸ்லோ, டென்மார்க்கில் கோபன்ஹேகன், ஃபின்லாந்தில் ஹெல்சின்கி, ஸ்வீடனில் ஸ்டாக்ஹோம், ஃபிரான்ஸ்சில் மெர்சிலி, ஜெர்மனியில் பெர்லின் ஆகிய இடங்களில் பயிலரங்கங்களை நடத்தியுள்ளது. பாரிசில் நடைப்பெற்ற டாப்ரெசா லண்டனில் நடைபெற்ற டபிள்யுடிஎம் ஸ்பெயிலின் நடத்த ஃபிடுர் சர்வதேச  கண்காட்சியில் ஆகியவற்றில் பங்கேற்றதுடன் பெர்லினில் நடைபெறும் ஐடிபி மற்றும் ஸ்வீடனில் கோதென்பர்க்கில் நடைபெறும்  டியூர் ஆகிய சர்வதேச கண்காட்சியில் பங்கேற்க உள்ளது.

கேரளாவில் நடைபெற்ற கிராண்ட் கேரளா ஷாப்பிங் ஃபெஸ்டிவல் திருவிழா, கடவுளின் தேசம் என்று வர்ணிக்கப்படும் கேரளாவில் தொடர்ந்து ஐந்து முறை பெரும் வெற்றி பெற்றுள்ளது. கேரள அரசு மேற்கொண்ட இந்த முயற்சி கடந்த 2007 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது இது பெரும் எதிர்ப்பார்ப்பை ஆண்டுதோறும் ஏற்படுத்தும் நிகழ்வாக மாறியிருக்கிறது. கேரளாவின் தொழில் மற்றும் வர்த்தக துறை நிதி மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் ஆகியவற்றின் ஆதரவுடன் கேரளாவின் சுற்றுலாத்துறை நடத்தும் இந்த நிகழ்ச்சி , கேரளாவை சர்வதேச ஷாப்பிங் தொகுப்பாக மாற்றுவதில் பெரும் வெற்றி பெற்றுள்ளது. புதிய நிறுவனங்கள் ஆச்சரியமூட்டும் சலுகைகள் மற்றும் பரிசுகள் ஆகியவை இந்த ஷாப்பிங் திருவிழாவை பெரும் வெற்றி பெறச் செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்