முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல் டெஸ்ட்: ஆஸ்திரேலியா மே.இ. தீவை தோற்கடித்தது

வெள்ளிக்கிழமை, 13 ஏப்ரல் 2012      விளையாட்டு
Image Unavailable

 

பார்படோஸ், ஏப். 13 - மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதி ராக பார்படோசில் நடைபெற்ற முத லாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியி ல் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித் தியாசத்தில் வெற்றி பெற்று இந்தத் தொடரில் 1- 0 என்ற கணக்கில் முன்னி லை பெற்று உள்ளது. 

ஆஸ்திரேலிய அணி கேப்டன் மைக்கே ல் கிளார்க் தலைமையில் மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்டன் டேரன் சம்மி தலை மையிலான அணிக்கு எதிராக விளை யாடி வருகிறது. மே.இ.தீவு மற்றும் ஆஸ்திரேலிய அணி களுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பார்படோஸ் தீவில் பிரிட்ஜ் டவுன் நகரில் உள்ள கென்னிங்டன் ஓவ ல் மைதானத்தில் கடந்த 7-ம் தேதி துவ ங்கி 11 -ம் தேதி வரை நடந்தது. 

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மே.இ.தீவு அணி 153 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 449 ரன்னை எடுத் து ஆட்டத்தை டெக்ளெர் செய்தது. 

முன்னாள் கேப்டன் சந்தர்பால் 248 பந் தில் 103 ரன்னை எடுத்தார். தவிர, டிவைன் பிராவோ 51 ரன்னையும், பிராத் வெயிட் 57 ரன்னையும், எட்வர் ட்ஸ் 61 ரன்னையும், கேப்டன் சம்மி 41 ரன்னையும் எடுத்தனர். பின்பு முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ் திரேலிய அணி 145 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 406 ரன்னை எடுத்து ஆட்ட த்தை டெக்ளெர் செய்தது. 

கேப்டன் மைக்கேல் கிளார்க் 173 பந்தி ல் 73 ரன்னை எடுத்தார். தவிர, மைக் ஹஸ்சே 48 ரன்னையும், வார்னர் 42 ரன் னையும், வாட்சன் 39 ரன்னையும், ஹா ரிஸ் 68 ரன்னையும் எடுத்தனர். 

தொடர்ந்து 2 -வது இன்னிங்சை ஆடிய மே.இ.தீவு அணி 66.4 ஓவரில் அனைத் து விக்கெட்டையும் இழந்து 148 ரன் னை எடுத்தது. பிராவோ 32 ரன்னையும், நரைன் 21 ரன்னையும், ரோச் 25 ரன்னையும், கீப்பர் பாக் 23 ரன்னையும் எடுத்தனர். 

ஆஸ்திரேலிய அணி 2- வது இன்னிங்சி ல் 192 ரன்னை எடுத்தால் வெற்றி பெற லாம் என்ற இலக்கை மே.இ. தீவு அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந் த அணி 47 ஓவரில் 7 விக்கெட் இழப்பி ற்கு 192 ரன்னை எடுத்தது. 

இதனால் ஆஸ்திரேலிய அணி இந்த முதல் டெஸ்ட் போட்டியில் 3 விக்கெ ட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று உள்ளது. இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக ஆர். ஜே. ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்