முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஞ்சாப் - டெக்கானுடன் இன்று பலப்பரிட்சை

ஞாயிற்றுக்கிழமை, 13 மே 2012      விளையாட்டு
Image Unavailable

 

சண்டிகார், மே. 13 - ஐ.பி.எல். போட்டியில் சண்டிகாரில் இன்று நடக்க இருக்கும் லீக் ஆட்டத்தி ல் பஞ்சாப் கிங்ஸ லெவன் அணியும், டெக்கான் சார்ஜர்ஸ் அணியும் மோத உள்ளன. பஞ்சாப் அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் தான் அரை இறுதிக் கான வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நிலையில் இன்று டெக்கான் அணியை சந்திக்கிறது. 

கேப்டன் குமார் சங்கக்கரா தலைமையி லான டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கும், கேப்டன் டேவிட் ஹஸ்சே தலைமையி லான பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணிகளுக்கும் இடையேயான இன்றைய லீக் போட்டி சண்டிகாரில் உள்ள பஞ் சாப் கிரிக்கெட் சங்க அரங்கத்தில் பகலி ரவு ஆட்டமாக நடக்கிறது. 

தற்போது நடந்த வரும் ஐ.பி.எல். போட்டியில் மொத்தம் 9 அணிகள் பங் கேற்று வருகின்றன. இதில் டெக்கான் அணி 13 ஆட்டத்தில் விளையாடி 2 வெ ற்றி மட்டும் பெற்று கடைசி இடத்தில் உள்ளது. 

புனே அணி 8 - வது இடத்தில் உள்ளது. அந்த அணி 14 ஆட்டத்தில் ஆடி 4 வெற் றியுடன் உள்ளது. டெக்கான் மற்றும் புனே அணிகள் அரை இறுதிக்கான வாய்ப்பை இழந்து விட்டன. இன்றைய ஆட்டத்தில் மோத உள்ள பஞ்சாப் மற்றும் டெக்கான் அணிகளை ஒப்பிடும் போது, பஞ்சாப் அணிக்கு அதிக வெற்றி வாய்ப்பு உள்ளது. உள் ளூர் ரசிகர்களின் ஆதரவும் உள்ளது. அந்த அணிக்கு அரை இறுதி வாய்ப்பு இன்னும் உள்ளது. 

12 போட்டியில் பங்கேற்று 12 புள்ளிகள் பெற்று உள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி தற்போது புள்ளிகள் தர வரிசையில் 7 -வது இடத்தில் உள்ளது. அந்த அணி இதுவரை கடந்த 2008 -ம் ஆண்டில் மட்டும் அரை இறுதிக்கு தகுதி பெற்றது. 

டெல்லி டேர்டெவில்ஸ் அணி பட்டிய லில் முதலிடத்திலும், கொல்கத்தா அணி 2 -வது இடத்திலும் உள்ளன. இந் த இரண்டு அணிகளுக்கும் அரை இறுதி வாய்ப்பு உறுதியாகி விட்டது. 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், மும் பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங் ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ் சாப் அணிகள் அரை இறுதிக்காக கடும் போட்டியில் இறங்கி உள்ளன. 

பஞ்சாப் அணிக்கு கடும் சவால் காத்தி ருக்கிறது. அடுத்து நடக்க இருக்கும் போட்டியில் அந்த அணி டெல்லி அணியை டெல்லியில் சந்திக்க இருக்கிறது. பஞ்சாப் இதுவரை டெல்லியுடன் மோதியது இல்லை. 

இதனைத் தொடர்ந்து தர்மசாலாவில் நடக்க இருக்கும் லீக்கில் பஞ்சாப் அணி மற்றொரு அணியுடன் ஆட வே ண்டி உள்ளது. இதற்கிடையே தர்மசா லாவில் நடக்கும் ஆட்டத்தில் சென் னை அணியை சந்திக்கிறது. 

பஞ்சாப் அணியின் தற்காலிக கேப்ட னான டேவிட் ஹஸ்சேவிற்கு தற்போ து கடும் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. எதிரணிகளை சமாளித்து வெற்றி பெறு வது குறித்து அவர் ஆலோசனை நடத்தி வருகிறார். 

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐதரா பாத்தில் நடந்த லீக்கில் பஞ்சாப் அணி 25 ரன் வித்தியாசத்தில் டெக்கானை வீழ்த்தியது. எனவே இன்றைய லீக்கில் அந்த அணி தன்னம்பிக்கையுடன் களம் இறங்குகிறது. 

ஆனால் பஞ்சாப் அணி உள்ளூர் மை தானத்தில் நடந்த போட்டிகளில் அதிக தோல்வியையே பெற்று உள்ளது. இந்த சாதனை அந்த அணியின் கேப்டனான ஹஸ்சேவிற்கு கவலையை அளித்துள்ளது. 

பஞ்சாப் அணியின் துவக்க வீரரான மந்தீப் சிங் நல்ல பார்மில் இருக்கிறார். அவர் இதுவரை மொத்தம் 359 ரன்னைக் குவித்து இருக்கிறார். தவிர, ஆஸ்தி ரேலிய வீரர் ஷான் மார்ஷ் , பாக். ஆல் ரவுண்டர் அசார் மெக்மூத் மற்றும் தெ. ஆ. இளம் வீரரான டேவிட் மில்லர் ஆகியோ ர் மிடில் ஆர்டரில் நன்கு ஆடி வருகின்றனர். 

பஞ்சாப் அணியின் பந்து வீச்சைப் பொறுத்தவரை பிரவீன் குமார், பர்விந்த ர் அவானா, மற்றும் மெக்மூத் ஆகி யோர் தங்களது பணியை சிறப்பாக ஆற்றி வருகின்றனர். அவர்களுக்கு பக்க பலமாக பையூஷ் சாவ்லா சுழற் பந்து வீசி வருகிறார். பஞ்சாப் அணியின் பீல் டிங்கும் நன்கு முன்னேறி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்