முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.வில் இருந்து விலகமாட்டேன் 71 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுஉள்ளது

திங்கட்கிழமை, 14 மே 2012      இந்தியா
Image Unavailable

பெங்களூரு, மே - 15 - பாரதிய ஜனதாவில் இருந்து ஒருபோதும் நான் விலகமாட்டேன். மேலும் எனக்கு 71 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது என்று கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். சுரங்க முறைகேட்டில் சிக்கிய எடியூரப்பாவின் பதவி பறிக்கப்பட்டு சதானந்த கவுடாவுக்கு முதல்வர் பதவி அளிக்கப்பட்டது. இதையடுத்து சதானந்த கவுடாவுக்கு அடிக்கடி குழப்பத்தை கொடுத்துவந்தார் எடியூரப்பா.  இந்த நிலையில் தன்னை முதல்வராக்கும்படி தலைமைக்கு மீண்டும் நெருக்கடி கொடுத்தார் எடியூரப்பா. அதே நேரத்தில் எடியூரப்பா  மீதான சுரங்க முறைகேடு புகாரை விசாரிக்க சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி கொடுத்தது. இதனால் அதிர்ச்சியில் உறைந்துபோனார் எடியூரப்பா. இருந்தபோதிலும் அவர் தனக்கு 71 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவாக உள்ளனர் என்றும் அதில் 53 பேர் ராஜினாமா செய்யவும் தயாராக உள்ளனர் என்றார். 225 பேர் கொண்ட கர்நாடக சட்டசபையில் 113 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. இதில் 50 எம்.எல்.ஏ.க்கள் எடியூரப்பாவின் கட்டுப்பாட்டிலும், 63 பேர் முதல்வர் கவுடாவின் கட்டுப்பாட்டிலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்