முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சச்சின் தற்போது நன்றாக ஆடி வருகிறார்: கபில்தேவ்

திங்கட்கிழமை, 19 நவம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

கெளஹாத்தி, நவ. 20 - சச்சின் டெண்டுல்கர் தற்போது நன்றா க ஆடி வருகிறார், அவரது பார்ம் சிறப் பாக உள்ளது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கபில்தேவ் தெ ரிவித்து இருக்கிறார். 

மேலும், சர்வதேச கிரிக்கெட்டில் 23 வருடங்களைப் பூர்த்தி செய்துள்ள அவ ர் 30 வருடம் வரை ஆட வேண்டும் என் றும் தேவ் கூறினார். 

அசாம் மாநிலத்தின் தலைநகரான கெளஹாத்தியில் நிருபர்களைச் சந்தித்த கபில்தேவ் அவர்களது கேள்விக்கு பதி ல் அளிக்கையில் மேற்கண்டவாறு தெ ரிவித்தார். 

மேலும், சர்வதேச கிரிக்கெட் போட்டி களில் டெண்டுல்கர் 23 வருடத்தை பூர் த்தி செய்து இருப்பது மகத்தானது. அவ ர் 30 வருடம் வரை ஆட வேண்டும். தற் போது அவர் நன்றாக ஆடி வருகிறார் என்றும் அவர் கூறினார். 

கெளஹாத்தியில் உள்ள ராயல் குளோ பல் பள்ளியில் மாணவர்கள், பெற்      றோர் இடையேயான கருத்தாய்வுக் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொள் வதற்காக கபில்தேவ் அங்கு வந்திருந் தார். 

ஐ.சி.சி. முன்னதாக டெஸ்ட் போட்டி யை பகலிரவு ஆட்டமாக நடத்த வேண்டும் என்று ஆலோசனை தெரிவித்து இருந்தது. இது குறித்து கபில்தேவ் நேர டியாக பதில் அளிக்கவில்லை. 

இந்தப் பிரச்சினை குறித்து இந்திய கிரி க்கெட் வாரியம் முடிவு எடுக்கும். அத ன் பிறகு, நாம் இது குறித்து கருத்து தெ ரிவிக்கலாம் என்று அரியானா வீரர் கூறினார். முன்னதாக பகலிரவு ஆட்டத் திற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார். 

மூத்த வீரர்களான ராகுல் டிராவிட் மற் றும் வி.வி.எஸ். லக்ஷ்மண் போன்ற வீர ர்களின் ஓய்வினால் இந்திய அணிக்கு பாதிப்பு வராது என்றும் கபில் குறிப்பி ட்டார். 

சுனில் கவாஸ்கர் ஓய்வு பெற்ற போது, இந்திய அணி இனிமேல் தாக்குப் பிடிக் காது என்று மக்கள் நினைத்தார்கள். ஆனால் நாம் அதில் இருந்து மீண்டோ ம். இளைஞர்கள் அந்த பொறுப்பினை எடுத்துக் கொண்டார்கள். இதற்கு சிறி து காலம் ஆனது என்றும் தேவ் தெரிவி த்தார். 

தற்போது இந்திய அணியில் கோக்லி மற்றும் புஜாரா இருவரும் சிறப்பாக ஆடி வருகின்றனர். மூத்த வீரர்கள் ஓய்வு பெறும் போது, இளம் வீரர்கள் அந்த இடத்தை நிரப்புவார்கள் என்றும் அரி யானா புயலான தேவ் கூறினார். 

கிரிக்கெட் வீரர்கள் மற்றும் இதர விளையாட்டு வீரர்களுக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து அவரிடம் கேட்ட போது, இது குறித்து சட்ட வல்லுனர்க ளிடம் தான் கேட்க வேண்டும். இருந்த போதிலும், விளையாட்டு வீரர்களுக்கு இந்த விருது வழங்கப்படும் பட்சத்தில் அது நமக்கு பெருமை தான் என்றும் அவர் தெரிவித்தார். 

சச்சின் டெண்டுல்கர் ராஜ்ய சபா உறுப் பினராக நியமிக்கப்பட்டதும் நாம் அனைவரும் பெருமைப் பட்டோம் என்றும் முன்னாள் ஆல்ரவுண்டர் கூறி னார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்