முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வளர்ச்சியை மீட்டெடுக்க ஒருமித்த அர்ப்பணிப்பு: பிரதமர்

வெள்ளிக்கிழமை, 6 செப்டம்பர் 2013      இந்தியா
Image Unavailable

 

செயின்ட்பீட்டர்ஸ்பெர்க், செப். 7 - வளர்ச்சியை மீட்டெடுக்க ஒருமித்த அர்ப்பணிப்பு உணர்வை வெளிப்படுத்த வேண்டும் என்று ஜி - 20 நாடுகளை பிரதமர் மன்மோகன்சிங் கேட்டுக் கொண்டார். வளரும் நாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தங்களது நிதி கொள்கைகளை படிப்படியாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று மேற்கத்திய நாடுகளை கேட்டுக் கொண்ட பிரதமர் மன்மோகன்சிங் ஜி - 20 மாநாட்டில் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்தார். 

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்ட உலகின் முக்கிய தலைவர்கள் பங்கேற்ற ஜி - 20 மாநாட்டில் மன்மோகன்சிங் பேசியதாவது, 

இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகள் தற்போது நிதி நெருக்கடியில் தள்ளாடி கொண்டிருக்கின்றன. இந்த நெருக்கடிக்கு தீர்வு காண விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட வேண்டும். வளர்ந்து வரும் நாடுகளின் வளர்ச்சியை மீட்டெடுக்க ஒருமித்த அர்ப்பணிப்பு உணர்வை வெளிப்படுத்துவது அவசியமாகிறது. நிலையான வெளிப்புற ஆதரவு நிலை எங்களுக்கு கிட்டுமானால் அது எங்களுக்கு வளர்ச்சியை மீட்டெடுக்க உதவியாக இருக்கும். இந்த வகையில் ஜி - 20 நாடுகளின் பங்களிப்பு முக்கியமானதாகும். நாங்களும் ஒருமித்த அர்ப்பணிப்பு உணர்வை வெளிப்படுத்துவோம் என்ற சமிக்ஞையை இந்த உச்சிமாநாடு தெரியப்படுத்த வேண்டும். தரமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும். இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர் வங்கி கொள்கைகளில் முக்கிய மாற்றங்கள் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த முயற்சி சீர்திருத்த நடவடிக்கைகளை வேகப்படுத்தும் என்றார் பிரதமர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்