முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் எடியூரப்பா வீட்டு முன்பு தேவகவுடா நாளை போராட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

பெங்களூர்,ஜூன்.- 26 - கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா வீட்டு முன்பு நாளை தர்ணா போராட்டம் நடத்தப்படும் என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா அறிவித்துள்ளார். கர்நாடக பாரதிய ஜனதா முதல்வர் எடியூரப்பா மீது மதசார்பற்ற ஜனதாதளம் தலைவர் தேவகவுடா மற்றும் அவரது மகனும் முன்னாள் முதல்வருமான குமாரசாமியும் கடுமையான குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றனர். அதேமாதிரி தேவகவுடா குடும்பத்தினர் மீது நிலப்பேர ஊழல் குற்றச்சாட்டை முதல்வர் எடியூரப்பா சுமத்தி வருகிறார். இதனால் முதல்வர் எடியூரப்பாவுக்கும் மதசார்பாற்ற ஜனதாதளம் கட்சியினர்களுக்கும் இடையே கடும் மோதல் போக்கு உருவாகியுள்ளது. இந்தநிலையில் தன்னுடைய சொந்த மாவட்டமான ஹாசன் புறக்கணிக்கப்படுவதாகவும் எந்தவித வளர்ச்சி திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை என்று கூறி பெங்களூரில் உள்ள எடியூரப்பா வீட்டு முன்பு நாளை தர்ணா போராட்டம் நடத்தப்போவதாக முன்னாள் பிரதமர் தேவகவுடா அறிவித்துள்ளார். மாநிலத்தில் பாரதிய ஜனதா அரசு பதவி ஏற்று 3 ஆண்டுகளாகின்றன. இதுவரை எனது சொந்த மாவட்டமான ஹாசனுக்கு எந்தவித வளர்ச்சி நிதியும் ஒதுக்கீடு செய்யவில்லை என்று நேற்று பெங்களூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த தேவகவுடா கூறினார். இதை கண்டித்து நாளை எடியூரப்பா வீட்டு முன்பு நான் தர்ணா போராட்டம் நடத்தப்போகிறேன். இதில் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள்,எம்.பி.க்களும் கலந்துகொள்வார்கள் என்றார். ஹாசன் பாராளுமன்ற தொகுதியில் இருந்து தேவகவுடா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே கடந்த 22-ம் தேதி ஹாசன் நகரில் தேவகவுடா தர்ணா போராட்டம் நடத்தினார். ஹாசன் மாவட்டத்தில் உள்ள அனேகல் தாலுகாவில் ஒரு தனியார் பள்ளிக்கு சொந்தமான 6.7 ஏக்கர் நிலம் விதிமுறைகளை மீறி நாராயாணா ஹ்ருதாலயா மருத்துவமனையானது விதிமுறை மீறி கையகப்படுத்தியுள்ளது. இதில் எடியூரப்பா தலையிட்டு நிலம் கையகப்படுத்தியதை ரத்து செய்ய வேண்டும் என்று எடியூரப்பாவுக்கு தேவகவுடா ஏற்கனவே ஒரு கடிதமும் எழுதியுள்ளார். அந்த கல்வி நிலையமானது கல்வி நிலையத்தின் நிர்வாகிகளுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு கோர்ட்டில் உள்ளது. அப்படியிருக்க அந்த நிலத்தை கட்டாயப்படுத்தி பறிமுதல் செய்ய முயற்சி நடக்கிறது என்றும் தேவகவுடா கடுமையாக குற்றஞ்சாட்டினார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்