முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் அணி ​ஹர்பஜன் சிங் நீக்கம் -​ராகுல் சர்மா சேர்ப்பு

வெள்ளிக்கிழமை, 30 செப்டம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

சென்னை, செப். - 30 - இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரே ஒரு 20  ஓவர் போட்டியில் விளையாடுகிறது. இதில் முதல் 2 ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி வீரர்களை தேர்வு செய்வதற்கான தேர்வு குழு கூட்டம் ஸ்ரீகாந்த் தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வீரர்கள் தேர்வு தொடர்பாக கடுமையாக விவாதிக்கப்பட்டது. அதன்பின் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. காயம் காரணமாக இங்கிலாந்து தொடரில் விளையாடாத சச்சின் தெண்டுல்கர், ஜாகீர்கான், சேவாக் ஆகியோர் சேர்க்கப்படவில்லை. காயத்தில் இருந்து மீண்டு சாம்பியன்ஸ் லீக்  கிரிக்கெட் டுவென்டி 20 போட்டியில் விளையாடும் ஹர்பஜன் சிங்கும் சேர்க்கப்படவில்லை. காயத்தில் இருந்து மீண்டுள்ள கவுதம் காம்பீர் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் ராகுல் சர்மாவிற்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 15 பேர் கொண்ட இந்தியா அணி விவரம் வருமாறு:​தோனி (கேப்டன்), காம்பீர், பார்த்தீவ் பட்டேல், ரகானே, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, ஆர்.அஸ்வின், வருன் ஆரோன், உமேஷ் யாதவ், வினய் குமார், எஸ். அரவிந்த், ராகுல் சர்மா, மனோஜ் திவாரி, பிரவீன் குமார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்