முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேறியது

வியாழக்கிழமை, 24 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, நவ.- 24 - சென்னை மாநகராட்சியின் முதல் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவிக்கும் முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை மேயர் சைதை துரைசாமி கொண்டுவந்தார். தீர்மானத்தின்  மீது அ.தி.மு.க, காங்கிரஸ், தே.மு.தி.க, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பேசியபின் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. தீர்மானத்தின் விபரம் வருமாறு-தமிழக முதலமைச்சர் தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் மீண்டும் ஆட்சியில் அமர்ந்தவுடன் பதவியேற்ற நாள் அன்றே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வண்ணமாக, ஏழை மக்களுக்கு 20 கிலோ விளையில்லா அரிசி, தாலிக்குத் தங்கம், பட்டம் மற்றும் பட்டயம் படித்து ஏழைப்பெண்களுக்குத் திருமண உதவித் தொகை ரூ.50,000/. வழங்குதல் போன்ற மக்கள் நலத் திட்டங்களை அறிவித்து அதனைச் சிறப்பாக மேலும் செயல்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, நிர்வாகத்தை சிறப்பாக,திறமையாக நடத்துவதற்கு முன்னுரிமை அளித்து நேர்மையான, திறமையான, பொறுப்பான, வெளிப்படையான,நிர்வாகத்தில் உறுதிபூண்டு அதை செயல்படுத்தி வருகிறார்கள்.சென்னை குப்பையில்லா, சுகாதாரமான, தூய்மையான, எழில்மிகு சென்னையாக உருவாக்க துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழக மக்கள் எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து, அவர்கள் சிறப்பாக வாழ்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முதலமைச்சர் மேற்கொண்டு வருகிறார்.இத்தகைய பணிகளை மேற்கொண்டு வரும் முதல்வர் தமிழ்நாட்டின் பழமைவாய்ந்த சிறப்புமிக்க சென்னை மாநகராட்சியின் தேர்தலில் அன்று சென்னப்பநாயக்கர் பட்டினம் என்றழைக்கப்பட்ட இன்றைய சென்னையின் அழகுக்கும், அளவில்லா வளர்த்திக்கும், அழகிய பொலிவிற்கும், மாசற்ற மாநகரம் என்ற பெருமைக்கும், வாகனத்தில் பயணிக்கும்போதே ஆவணத்தில் கையெழுத்து அழகுறவே இடும் வண்ணம் அலுங்காத, குலுங்காத அழகுமிகு சாலைகள், எக்காலத்திலும் முழுமையான பாதுகாப்பு என்னும் இலக்கணம் தவறாத மாநகராட்சியாக இந்தியாவில் இதுவே தலைசிறந்த மாநகராட்சி என்னும் பெருமையை எட்டுவதற்கு ஏற்ற வகையில் உருவாக்கப்படும் என்றும், பொது மக்களிடத்திக் சுத்தமான சென்னை, கைசுத்தமான நிர்வாகம் என்கின்ற உறுதியினை கொடுத்தும், மாபெரும் வெற்றிக்கு தமிழக முதல்வர் காரணமாக இருந்ததையும்,மேலும் சென்னை மாநகராட்சியின்,மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு தனது இடைவிடா பணிச்சுமைக்கிடையே நவ.25 அன்று வருகைபுரிந்து, கலந்துகொண்டு, சிறப்பித்தமைக்கும், இம்மண்ணும், இம்மாநிலமும், இம்மண்வாழ் மக்களும் எல்லையில்லா பயன்கள் பெற்று, இன்பமுற்று வாழதன்னை மெய்வருத்தி உழைக்கின்ற முதல்வர்க்கும் மற்றும் அமைச்சர் பெருமக்களுக்கும் உளமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்வதில் இம்மாமன்றம் பெருமிதம் கொள்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்