முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி. சட்டசபை தேர்தல்: ராகுல் காந்தி தீவிர ஆலோசனை

ஞாயிற்றுக்கிழமை, 4 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,டிச.4 - உத்திரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் கடைப்பிடிக்க வேண்டிய யுக்தி குறித்து மாநிலத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி தீவிர ஆலோசனை நடத்தினார். சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதையொட்டி நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியினர்களிடையே இது குறித்து கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அன்னிய நேரடி முதலீட்டிற்கு காங்கிரஸ் கட்சியில் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி கடைப்பிடிக்க வேண்டிய யுக்தி குறித்து நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி நேற்று ஆலோசனை நடத்தினார். கூட்டத்திற்கு பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ் பாப்பர், உத்திரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு ஒரு பிரச்சினையே இல்லை. எதிர்க்கட்சிகள்தான் தேவையில்லாமல் பிரச்சினையை எழுப்பி வருகின்றன என்றார். உத்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்களும் கூட்டத்தில் கலந்துகொண்டனர். இனிமேல் உத்திரப்பிரதேசத்தில் கூடுதல் நேரத்தை செலவழிக்க இவர்கள் முடிவு செய்துள்ளனர். உத்திரப்பிரதேச மாநில சட்டசபையில் 403 உறுப்பினர்கள் உள்ளனர். ஒரு காலத்தில் காங்கிரஸ் கோட்டையாக இருந்த உத்திரப்பிரதேசத்தில் கடந்த 1989-ம் ஆண்டில் இருந்து காங்கிரஸ் அந்த மாநிலத்தில் ஆட்சியில் இல்லை. ஆனால் கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டது. இதில் அந்த கட்சி எதிர்பார்த்ததைவிட கூடுதல் சீட் கிடைத்தது. மொத்தம் உள்ள 80 லோக்சபை தொகுதிகளில் 22-ல் காங்கிரஸ் வெற்றிபெற்றது. சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு செய்ய மத்திய அரசு அனுமதிக்க முடிவு செய்திருப்பதற்கு காங்கிரஸ் கூட்டணி கட்சிகளான தி.மு.க.,திரிணாமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்