முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஞ்சாப் மாநிலத்தில் தேர்தல்சலுகைகள் முதல்வர் பிரகாஷ்சிங்பாதல்

ஞாயிற்றுக்கிழமை, 4 டிசம்பர் 2011      அரசியல்
Image Unavailable

சண்டிகார்,டிச- -5- பஞ்சாப் மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. இதனையொட்டி ஓட்டுக்களை பெறுவதற்காக ஆளும் சிரோண்மணி அகாலிதளம்-பாரதிய ஜனதா கூட்டணி அரசானது மக்களுக்கு சலுகைகளை அள்ளிக்குவித்துள்ளது.  நாட்டில் பஞ்சாப், உத்திரப்பிரதேசம் உள்பட பல மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதில் வெற்றிபெறுவதற்காக பஞ்சாப் மாநில முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் தலைமையிலான கூட்டணி அரசானது பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. மாநிலத்தில் தற்போது 10 லட்சம் குடும்பங்களுக்கு 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இது 15 லட்சம் குடும்பங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட குடியிருப்புகளுக்கு அனுமதி வழங்குவது, அரசு கல்லூரிகளில் பணிபுரியும் விரிவுரையாளர்கள் நிரந்தரமாக்கப்படுவது உள்பட பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது. மாநில முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் தலைமையில் நடைபெற்ற கேபினட் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று அரசு செய்தி தொடர்பாளர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார்.  கடந்த 1984-ம் ஆண்டில் டெல்லியில் நடைபெற்ற கலவரத்தில் பாதிக்கப்பட்ட ராணுவ வீரர்கள் பென்சன் ரூ.2 ஆயிரத்து 500-லிருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. கலவரம் மற்றும் தீவிரவாதிகளால் பலியானவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிதி உதவியும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அரசு பாலிடெக்னிக்கில் பணிபுரியும் விரிவுரையாளர்களுக்கு இணையாக தனியார் பாலிடெக்னிக் கில் பணிபுரியும் விரிவுரையாளர்களுக்கு சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. வருவாய் துறை, சுங்கத்துறை, வரிவிதிப்பு துறை,தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அதிகாரிகள், பஞ்சாயத்து அதிகாரிகளுக்கும் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆயுத உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு வாட் வரி 12.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என்றும் அந்த செய்தி தொடர்பாளர் மேலும் கூறினார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்