முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் 5 லட்சம் லட்டுகளை அனுப்பும் புதிய கன்வேயர்

சனிக்கிழமை, 20 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

திருப்பதி, செப் 21:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதத்துக்குரிய பூந்தி கோவிலுக்கு வெளியே தயார் செய்யப்பட்டு கன்வேயர் எந்திரம் மூலம் கோவிலுக்குள் அனுப்பப்படும். பின்னர் அந்த பூந்தி கோவிலுக்குள் உள்ள மடப்பள்ளியில் லட்டுவாக தயார் செய்து அதே கன்வேயர் எந்திரம் மூலம் வெளியே உள்ள லட்டு விற்பனை கவுண்டர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த கன்வேயரில் 3 லட்சம் லட்டுகள் மட்டுமே இதுவரை அனுப்பப்பட்டு வந்தது. வருகிற 26ம் தேதி பிரம்மோற்சவம் தொடங்குவதால் பக்தர்களுக்கு தட்டுபாடின்றி லட்டு பிரசாதம் கிடைக்க தேவஸ்தான அதிகாரிகள் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளனர். அதன் ஒரு கட்டமாக பூந்தி சப்ளை செய்ய புதிய கன்வேயர் எந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ. 45 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த கன்வேயர் எந்திரம் மூலம் தினமும் 5 லட்டுகள் எடுத்து செல்ல முடியும். இதனை தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி ஸ்ரீநிவாசராவ் நேற்று தொடங்கி வைத்தார். அவர் கூறும் போது, கோவிலில் ஏற்கனவே ஒரு கன்வேயர் எந்திரம் உள்ளது. புதிய எந்திரம் தொடங்கப்பட்டதன் மூலம் தினமும் 8 லட்சம் லட்டுகள் எடுத்து செல்ல முடியும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்