முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகிழக்கு பருவ மழையையொட்டி மக்கள் நலனை பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

திங்கட்கிழமை, 5 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

மதுரை,வடகிழக்கு பருவ மழையையொட்டி மக்கள் நலனை பாதுகாக்க அந்தந்த மாவட்ட நிர்வாகங்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

இதுகுறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-வடகிழக்கு பருவமழை அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் மழை பெய்யும். இதில் அக்டோபர் கடைசி வாரம், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் மழை பொலிவு அதிகமாக இருக்கும். தற்போது வடகிழக்கு பருவ மழைதொடங்கி உள்ளது. இந்த பருவ மழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை அனைத்தும் எடுக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. குறிப்பாக கடலோர மாவட்டங்களாக சென்னை, காஞ்சிபுரம், நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு நிவாரண முகாம்கள், பேரிடர் மீட்பாளர்கள், மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளன. தமிழகத்தில் உள்ள  32 வருவாய் மாவட்டங்களிலும் வடகிழக்கு பருவ மழையொட்டி மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிவக்கைகளை எடுத்து வருகிறது.

தவிர்க்க வேண்டும்...நீர்நிலைகளின் கரையை உயரபடுத்துதல், கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், மீட்பாளர்கள் தயார் நிலையில் இருப்பது குறித்த நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. நீர்நிலைகளில் செல்பிஎடுப்பதை தவிர்க்க வேண்டும். குழந்தைகள் செல்பி எடுப்பதை பெற்றோர்கள் கண்காணித்து அதை தவிர்க்க வேண்டும்.  வடகிழக்கு பருவ மழையையொட்டி அந்தந்த மாவட்ட நிர்வாகங்களுக்கு மக்கள் நலனை பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இது குறித்து விரிவான அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து