முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துப்புரவுத் தொழிலாளர்களுக்கு சொந்தப் பணத்தில் இருந்து ரூ.21 லட்சம் நன்கொடை வழங்கிய பிரதமர்

புதன்கிழமை, 6 மார்ச் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : கும்பமேளா துப்புரவுத் தொழிலாளர்களின் வங்கிக் கணக்குக்கு  ரூ. 21 லட்சம் தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளார் பிரதமர் மோடி. தன்னுடைய சொந்த சேமிப்பு கணக்கில் இருந்து அவர் இந்த பணத்தை வழங்கியுள்ளார்.

துப்புரவு தொழிலாளர்களுக்கு விருது

முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம் 25-ம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கும்பமேளா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, அங்கிருந்த துப்புரவுத் தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார். இதைத் தொடர்ந்து துப்புரவுத் தொழிலாளர்கள் 5 பேரின் பாதங்களை பிரதமர் மோடி கழுவி அவர்களை கவுரவப்படுத்தினார். துப்புரவுத் தொழிலாளர்களின் சீரிய பணியால், பிரயாக்ராஜ் நகரம் தூய்மையாக விளங்குவதாகவும், அவர்களின் செயல் ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் ஈர்த்துள்ளதாகவும் அப்போது பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். இதைத் தொடர்ந்து சிறந்த சேவையாற்றிய துப்புரவுத் தொழிலாளர்களுக்கு விருதுகளையும் அவர் வழங்கினார்.

ரூ. 21 லட்சம் நன்கொடை

இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்துக்குள்ளாக வாரணாசியில் துப்புரவுப்பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பணியாளர்கள் பலியாகினர். பகுதி நேர ஊழியர்களான அவர்களுக்கு பாதுகாப்பு சாதனங்கள் வழங்கப்படாதது உயிரிழப்புக்குக் காரணமாக அமைந்தது. பிரதமர் நரேந்திர மோடி, துப்புரவுத் தொழிலாளர்களின் கால்களைக் கழுவிய நிலையில், அவரின் சொந்தத் தொகுதியான வாரணாசியில் இரண்டு துப்புரவுத் தொழிலாளர்கள் இறந்தது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதனிடையே  பிரதமர் மோடி, கும்பமேளா துப்புரவுத் தொழிலாளர்களின் கணக்குக்கு, தன்னுடைய சொந்தப் பணமான ரூ. 21 லட்சத்தை நன்கொடையாக அளித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து