முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் 20-ம் தேதியுடன் முடிகிறது

வெள்ளிக்கிழமை, 5 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

தமிழக சட்டமன்ற  கூட்டத் தொடர்  வரும்   20-ம் தேதியுடன் முடிகிறது.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த  பிப்ரவரி மாதம் 8-ம் தேதி 2019 -20ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து மக்களவைத் தேர்தல் நெருங்கியதால், பட்ஜெட் மீதான விவாதத்துக்குப் பிறகு மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறாமலேயே பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.  இந்நிலையில் தேர்தல் முடிந்த நிலையில், துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு நிதி ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் பெறுவதற்காக, சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கடந்த ஜூன் 28 -ம் தேதி தொடங்கியது. பல்வேறு துறைகளுக்கான மானிய கோரிக்கைகள் குறித்து சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற்றது. இதில் பல்வேறு திட்டங்களை முதல்னர்  எடப்பாடி பழனிசாமி 110 - விதியின் கீழ் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வேலூர் மக்களவை தேர்தல் காரணமாக, சட்டப்பேரவை கூட்டத்தொடரை வரும் 20 -ம் தேதியுடன் நிறைவு செய்ய அலுவல் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதனையொட்டி சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜூலை 20-ம் தேதியுடன் முடிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து