முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹாங்காங் போராட்டம்: சீனாவுடனான வர்த்தகங்களை பாதிக்கும் என்கிறார் டிரம்ப்

திங்கட்கிழமை, 19 ஆகஸ்ட் 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : ஹாங்காங் விவகாரத்தில் சீன அரசு வன்முறையை கையாண்டால் அது அமெரிக்கா - சீன இடையிலான வர்த்தகத்தை கடுமையாக பாதிக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குகிறவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டு வர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது.  ஹாங்காங்கில் கைதிகள் பரிமாற்ற மசோதாவை முழுமையாக ரத்து செய்யுமாறு பல நாட்களாக அங்கு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், போராட்டக்காரரகள் மீது வன்முறையை பயன்படுத்தினால் அமெரிக்கா - சீனா வர்த்தக ஒப்பந்தங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், சீன அதிபர் ஜி ஜின்பிங் மிகவும் திறமை வாய்ந்த ஒரு தலைவர், அவர் ஹாங்காங் விவகாரத்தில் வன்முறையை கையாளாமல் போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி அமைதியான முறையில் இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவார் என நம்புகிறேன் என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து