எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழகத்தில் தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மாசுக்கள் அதிகரிப்பின் காரணமாக சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2017-ம் ஆண்டு தீபாவளி அன்று தலைநகர் டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதித்தது. அதையடுத்து நாடு முழுவதும் தடை விதிக்க முயற்சி மேற்கொண்டது. ஆனால், அதற்கு மத்தியஅரசு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கடந்த ஆண்டு (2018) அக்டோபர் 23-ம் தேதி சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கும் வகையில் தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சிக்ரி, அசோக்பூஷண் அமர்வு உத்தரவிட்டது. பட்டாசு வெடிக்கும் 2 மணி நேரம் எது என்பதை மாநில அரசே முடிவு செய்யலாம் என்றும் தெரிவித்தது. அதன்படி கடந்த ஆண்டு காலையில் 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலையில் 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில், பட்டாசு வெடிக்கும் நேரத்தை நிர்ணயம் செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழக அரசு தீபாவளியன்று பட்டாசுகளை வெடிப்பதற்கு காலை 6 முதல் 7 மணி வரையும், இரவில் 7 முதல் 8 மணி வரையும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிவிப்பில், பொதுமக்கள் குறைந்த ஒலிபட்டாசுகளை வெடிக்க வேண்டும். திறந்தவெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசு வெடிப்பதற்கு, அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்கலாம். அதிக ஒலி எழுப்பும் தொடர்ச்சியாக வெடிக்கக் கூடிய சரவெடிகளை தவிர்க்கலாம். மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் புதுச்சேரியில் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 9 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சீன பட்டாசுகளின் சட்ட விரோத இறக்குமதி, விற்பனை, கொள்முதல் என எல்லாவற்றுக்கும் மத்திய அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது. இது தொடர்பாக சுங்கத்துறை முதன்மை கமிஷனர் விடுத்துள்ள அறிவிப்பில், “பட்டாசுகள் இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ளது. எனவே சீன பட்டாசுகளை கொண்டு சென்றாலோ, வைத்திருந்தாலோ, மறைத்தாலோ, விற்பனை செய்தாலோ, வாங்கினாலோ, எந்த வகையில் கையாண்டாலும் அது சுங்க சட்டம் 1962-ன் கீழ் தண்டனைக்கு உரிய குற்றம் ஆகும்” என கூறப்பட்டுள்ளது.
சீனாவில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை கடத்திக்கொண்டு வருவதும், இந்திய சந்தைகளில் அவற்றை விற்பனை செய்வதும் கடுமையாக கவனத்தில் கொள்ளப்படும் எனவும் அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 17 sec ago |
மினி பான் கேக்5 days 19 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
05 May 2024சென்னை : தமிழகத்தில் நாளை தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் 7.50 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியீடு : முடிவுகளை குறுஞ்செய்தியாக அனுப்பவும் ஏற்பாடு
05 May 2024சென்னை : தமிழ்நாட்டில் 7.50 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
-
காயத்தால் ஐ.பி.எல். தொடரில் இருந்து பதிரனா விலகினார்
05 May 2024சென்னை : காயத்திற்கு சிகிச்சை மேற்கொள்ள பதிரனா தாயகம் திரும்பி உள்ளார்.
-
ஆள் கடத்தல் வழக்கில் கைது: எச்.டி.ரேவண்ணா கோர்ட்டில் ஆஜர்
05 May 2024பெங்களுரூ ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட எச்.டி. ரேவண்ணா நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
நீலகிரி செல்வோர் இ-பாஸ் பெற இணையதளம் அறிவிப்பு
05 May 2024நீலகிரி : நீலகிரி செல்லும் சுற்றுலாப்பயணிகள் இ-பாஸ் பெறும் வகையில் அதற்கான இணையதளம் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஜெர்ஸியை வழங்கிய கோலி
05 May 2024ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
-
ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பை: போட்டி அட்டவணை வெளியீடு
05 May 2024துபாய் : ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பைக்கான குழுக்கள் மற்றும் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
வங்காளதேசத்தில்...
-
பஞ்சாப் அணியை வீழ்த்தி பழி தீர்த்த சென்னை அணி : புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்
05 May 2024தர்மசாலா : 28 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி சேப்பாக்கத்தில் நடந்த போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பழி தீர்த்தது சென்னை அணி.
-
குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு அணி ஹாட்ரிக் வெற்றி
05 May 2024பெங்களூரு : குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 38 பந்துகள் எஞ்சி இருக்க 24 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
-
காலவரையின்றி சஸ்பெண்ட்: ஒலிம்பிக்கில் பங்கேற்பாரா மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா?
05 May 2024புதுடில்லி : ஊக்க மருந்து சோதனைக்கு ஒத்துழைக்காத காரணத்தினால் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவை தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் (என்ஏடிஏ) காலவரையின்றி சஸ்பெண்ட் செய்துள்
-
வழக்கு விசாரணையின்போது நீதிமன்றங்கள் வெறும் டேப் ரெக்கார்டராக இருக்கக்கூடாது : சுப்ரீம் கோர்ட் கருத்து
05 May 2024புதுடெல்லி : நீதிமன்றங்கள் வழக்கு விசாரணையின்போது சாட்சிகள் கூறுவதை அப்படியே பதிவு செய்யக்கூடிய வெறும் டேப் ரெக்கார்டர்களாக இருக்கக்கூடாது என்று வழக்கு ஒன்றின் தீரப்பில
-
நாங்கள் சிறப்பாக ஆடி வருகிறோம்: பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ்
05 May 2024பெங்களூரு : எங்களது வீரர்கள் நம்ப முடியாத வகையில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர் என்று குஜராத்தை வீழ்த்திய பிறகு பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ் த
-
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது: தமிழகத்தில் 94.56 சதவீத மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி : மறுகூட்டல், மறுமதிப்பீடுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் : * தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் 9-ம் தேதி வழங்கப்படும்
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் -2 தேர்வு முடிவுகளில் 94.56 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மதுரை சிறையில் தேர்வெழுதிய சிறைவாசிகள் 15 பேரும் தேர்ச்சி : 536 மதிப்பெண்கள் பெற்று ஒருவர் சாதனை
06 May 2024மதுரை : நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மதுரை மத்திய சிறையில் உள்ள 15 சிறைவாசிகள் அனைவரும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
அக்கரன் விமர்சனம்
06 May 2024எம்.எஸ்.பாஸ்கர் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் அக்கரன் படத்தின் தொடக்கத்திலேயே இரண்டு நபர்களைக் கடத்தி, அவர்களை துன்புறுத்தி கேள்விகளை கேட்கத் தொடங்குகிறார்.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தடை: இஸ்ரேல் அரசு அறிவிப்பு
06 May 2024ஜெருசலேம் : இஸ்ரேலில் செயல்பட்டு வரும் அல் ஜெசீரா செய்தி நிறுவனத்திற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.