முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

மினி பான் கேக்

Cooking time in minutes: 
20
Ingredients: 

மினி பான் கேக் செய்யத் தேவையான பொருட்கள்.

முட்டை – 3.

சர்க்கரை - 5 ஸ்பூன்.

ஆலிவ் ஆயில் - 2 ஸ்பூன்.

வெண்ணிலா எசன்ஸ் - ஒரு ஸ்பூன்.

பால் - 150 கிராம்.

தேன் - 2 ஸ்பூன்.

வெண்ணிலா சுகர் - ஒரு ஸ்பூன்.

பேக்கிங் பவுடர் -  8 கிராம்.

மைதாமாவு - 300 கிராம்.

எலுமிச்சை சாறு - ஒரு ஸ்பூன்.

எண்ணெய் - சிறிதளவு.

உப்பு - சிறிதளவு.

Method: 

செய்முறை ;--

  1. ஒரு பாத்திரத்தில் 3 முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலந்து கொள்ளவும்.
  2. இதனுடன் 5 ஸ்பூன் சர்க்கரை,ஆலிவ் ஆயில் 2 ஸ்பூன்,வெண்ணிலா எசன்ஸ் ஒரு ஸ்பூன் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளவும்.
  3. இதனுடன் 150 கிராம் பால்,தேன் 2 ஸ்பூன்,வெண்ணிலா சுகர் ஒரு ஸ்பூன்,பேக்கிங் பவுடர் 8 கிராம் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
  4. இதனுடன் 300 கிராம் மைதாமாவு மற்றும் சிறிதளவு உப்பு போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
  5. இதனுடன்  ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 2 ஸ்பூன் தண்ணீரை ஊற்றி நன்றாக கலந்து கொள்ளவும்.
  6. அடுப்பில் தவா வைத்து சிறிதளவு எண்ணெய்யை ஊற்றி தவா முழுவதும் எண்ணெய் படும் படி தேய்த்து வைத்துக்கொள்ளவும்.
  7. தவா சூடானவுடன்,தயார் செய்து வைத்துள்ள முட்டை கலவையை ஒரு புனலில் ஊற்றி சிறிய சிறிய வட்டமாக தவாவில் மெதுவாக ஊற்றி நன்றாக வேக வைக்கவும்.
  8. திருப்பி போட்டு நன்றாக வேக வைக்கவும்.
  9. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  10. சுவையான மினி பான் கேக் ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 8 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 8 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 10 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 10 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 8 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 8 hours ago