முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குழந்தைகள், குடும்பத்துடன் சென்று பார்க்க கூடிய திரைப்படம் தான் உண்மையான படம் - துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேச்சு

திங்கட்கிழமை, 23 டிசம்பர் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : குழந்தைகள், குடும்பத்துடன் சென்று பார்க்க கூடிய திரைப்படம் தான் உண்மையான படம் என்று டெல்லியில் நேற்று நடந்த 66-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார்.

 66-வது தேசிய திரைப்பட   விருது வழங்கும் விழா டெல்லி விக்யான் பவனில் நேற்று நடைபெற்றது. இதில் விருதுகளை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கினார். விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசும் போது கூறியதாவது:-

ஆதி காலம் முதல் பெண்களுக்கு மரியாதை அளிப்பது தான் நமது கலாச்சாரம். அனைத்து விதங்களிலும் பெண்களை முன்னிறுத்தி போற்றி வருகிறோம். சினிமா துறைகளிலும் பலர் சாதனை படைத்து வருகின்றனர். நதிகள், கல்விக் கடவுள் ஆகியவற்றிற்கும் பெண்களின் பெயர்களை வைத்து வழிபடுவது நமது கலாச்சாரம். பெண்களை மதிக்க வேண்டும் என இளைய சமுதாயத்திற்கு நாம் கற்றுத்தர வேண்டும்.  சமீப காலமாக பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடப்பது துரதிர்ஷ்டவசமானது. இவற்றை தடுக்க புதிய சட்டம் கொண்டு வர வேண்டும் என அனைவரும் கூறுகின்றனர். தேவை புதிய சட்டம் அல்ல. சமுதாய மாற்றம், விழிப்புணர்வு தான். சுற்றுச்சூழல் உள்ளிட்டவைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் சினிமா வலிமை வாய்ந்த தொலைத்தொடர்பாக விளங்குகிறது. மொழியும், கலாச்சாரமும் நமது கண்கள். அவற்றை நாம் பாதுகாத்து, வளர்க்க வேண்டும்.சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல, பெரிய தாக்கத்தை சமூகத்தில் ஏற்படுத்தும் வலிமை கொண்டது. இந்திய சினிமாக்கள்  உலக அளவில் புகழ்பெற்றது. இந்திய கலாச்சாரம், சினிமா, உணவு ஆகியவை தான் உலக அளவில் அதிகமானவர்களை கவர்ந்து வருகிறது. 

பாகுபலி போன்ற படங்கள் இந்திய சினிமா அதீத தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் திறன் கொண்டது என்பதை உலகிற்கு காட்டி உள்ளன. மக்களின் மனதை அதிகம் ஈர்க்க கூடியது சினிமா. அதனால் மக்களிடம் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நல்ல தகவல்களை கொண்டு சேர்ப்பதாக சினிமா இருக்க வேண்டும். சமூகத்தை வடிவமைப்பதாகவும் சினிமா இருக்க வேண்டும். குழந்தைகள், குடும்பத்துடன் சென்று பார்க்க கூடிய படம் தான் உண்மையான படம் என்பது எனது கருத்து. இது சென்சார் அல்ல. நமது அறிவு சார்ந்தது. அதை இழந்து விட்டால் மக்களின் அபிமானத்தை இழந்து விடுவோம். அனைவருக்கும் சமூக அக்கறை வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து