முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொதுமக்கள் வாக்கிங் செல்ல மூன்று மணி நேரம் அனுமதி : மே.வங்க முதல்வர் மம்தா அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 30 ஜூன் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் பொதுமக்கள் வாக்கிங் செல்ல மூன்று மணி நேரம் அனுமதி வழங்கப்படும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்காளத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் வராததால் ஜூலை 1-ம் தேதி வரை அம்மாநிலத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. என்றாலும் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் சேவை, ஜிம், மால்கள் போன்ற சிலவற்றிக்கு தடைகள் நீக்கப்படவில்லை. பேருந்து போக்குவரத்து போன்றவைகள் ஏற்கனவே தொடங்கி விட்டன.

இந்நிலையில் பொதுமக்கள் காலையில் 5.30 மணி முதல் 8.30 மணி வரை வாக்கிங் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும். திருமண விழாவில் 50 பேர் கலந்து கொள்ளவும், இறுதிச்சடங்கில் 25 பேர் கலந்து கொள்ளவும் அனுமதிக்கப்படுவார்கள் என்று மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து