முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா: மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி

வியாழக்கிழமை, 6 மே 2021      தமிழகம்
Image Unavailable

முன்னாள் மத்திய இணை அமைச்சரும், கன்னியாகுமரி இடைத்தேர்தலில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளருமான பொன் ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா தொற்று பரவல் இரண்டாம் அலை அதிவேகத்துடன் பரவி வருகிறது. தமிழகத்தில் கடந்த ஏப்ரலில் தொற்று பரவல் இரண்டாம் அலை அதிகரிக்க ஆரம்பித்ததிலிருந்து தினம் தினம் தொற்று எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதுவரை குறையவில்லை. சென்னையிலும் இதுவரை வரலாறு காணாத அளவில் தொற்று எண்ணிக்கை கூடி வருகிறது.

தொற்று பரவல் இளம் வயதினரை அதிகம் பாதிக்கிறது. ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது. படுக்கைகள் பற்றாகுறை அதிகரித்து வருகிறது. தொற்று பரவலுக்கு பல அரசியல் கட்சியினர் பொதுவாழ்வில் ஈடுபடுவோர் ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பல தலைவர்கள் பிரச்சாரம் முடிந்த சில நாட்களில் தொற்று பரவலுக்கு ஆளாகினர்.

கன்னியாகுமரி இடைத்தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிட்ட பொன் ராதாகிருஷ்ணன் தேர்தலில் தோல்வி அடைந்தார். அவருக்கு தொற்று பரவல் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு கொரோனா தொற்று அறிகுறி இருந்ததால் பரிசோதனை நடத்தப்பட்டதில் தொற்று உறுதியானதை அடுத்து மதுரை அரசு பொதுமருத்துவமனையில் பொன் ராதாகிருஷ்ணன் அனுமதிக்கப்பட்டார். நேற்று காலை அவருக்கு மீண்டும் பரிசோதனை நடத்தப்பட்டது.  பெரிய அளவில் பாதிப்பில்லாமல் லேசான தொற்று உள்ளதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து