எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் பாதிக்காமல் சுரங்கப் பணிகளை மேற்கொள்வது குறித்து நிலையான சுரங்கக் கொள்கையை உருவாக்க வேண்டும் என்று புவியியல் மற்றும் சுரங்கத்துறை, தமிழ்நாடு கனிம நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில், புவியியல் மற்றும் சுரங்கத்துறை, தமிழ்நாடு கனிம நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் பாதிக்காமல் சுரங்கப் பணிகளை மேற்கொள்வது குறித்து நிலையான சுரங்கக் கொள்கையை உருவாக்க வேண்டும் என்று அறிவுறுத்திய முதல்வர், செயற்கை மணல் தயாரிப்பு மற்றும் விற்பனையை ஒழங்குமுறைப்படுத்த புதிய கொள்கை உருவாக்குவது குறித்தும், கனிம வருவாயை அதிகரிக்க எடுக்கப்பட வேண்டிய பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.
பயன்பாட்டில் இல்லாத குவாரிகளைக் கண்டறிந்து, வாய்ப்புள்ள இடங்களில் அக்குவாரிகளை மழைநீர் சேகரிப்பு அமைப்புகளாக மாற்றி பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வரவும், பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்குப் பாதிப்பு விளைவிப்பதாக உள்ள பயனற்ற கல்குவாரிகளை மறுசீரமைப்பு செய்து, பாதுகாப்பினை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், திருவக்கரை கிராமத்தில் 2 கோடி ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்மரப் படிமங்கள் மற்றும் திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் உள்ள தொல்லுயிர்ப் படிமங்கள் ஆகியவற்றைப் பாதுகாத்து யுனெஸ்கோவின் பாரம்பரியச் சின்னங்களின் பட்டியலில் சேர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் ஆலோசிக்கப்பட்டது.
புவியியல் மற்றும் சுரங்கத்துறையில், குத்தகை விண்ணப்பம் பெறுவதில் தொடங்கி, குவாரி குத்தகை உரிமம் மற்றும் நடைச்சீட்டு வழங்கும் வரை சுரங்க நிர்வாகத்தில் மின்னணு சேவை முறையை ஏற்படுத்த விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் அறிவுறுத்தினார்.
தமிழ்நாடு கனிம நிறுவனம், அடுத்த ஐந்தாண்டுகளில் ரூ.250 கோடி அளவிற்கு வருவாயினை உயர்த்த முயற்சி மேற்கொள்ள வேண்டுமெனவும், சிவகங்கை மாவட்டத்தில் கிடைக்கும் கிராபைட்டில் இருந்து அதிக செறிவூட்டப்பட்ட உயர்தர கிராபைட் தயாரிப்பதற்கு உரிய தொழில்நுட்ப முறை குறித்து ஆய்வு மேற்கொள்ளவும், அரக்கோணம் அருகில் செயற்கை மணலைத் தயாரிக்க புதிய உற்பத்திப் பிரிவு தொடங்கவும் செயல் திட்டங்களை உருவாக்க முதல்வர் கேட்டுக்கொண்டார். தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம் கூடுதல் சுரங்கப் பகுதிகளை அடுத்த மூன்று வருடத்தில் பயன்பாட்டிற்குக் கொண்டு வரவும், உலகத்தரம் வாய்ந்த ஆலோசகரை நியமித்து உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், தொழில்துறை முதன்மைச் செயலாளர் முருகானந்தம், தொழில்துறை சிறப்பு செயலாளர் லில்லி, புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் நிர்மல் ராஜ், தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கதிவரன், தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் முனைவர் இரா.பிருந்தா தேவி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 3 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 3 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 3 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 days ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரிஸ்பி கார்ன் ஸ்நாக்ஸ்6 hours 1 min ago |
ஆப்பிள் ரோஸ்ட்4 days 6 hours ago |
சுவையான உருளைகிழங்கு வறுவல்1 week 2 hours ago |
-
ரிசர்வ் வீரர்கள் அறிவிப்பு
21 May 202420 அணிகள் கலந்து கொள்ள உள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்த தொடர் இந்த முறை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது.
-
வங்கக்கடலில் இன்று புதிய புயல் சின்னம் உருவாகிறது : 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு
21 May 2024சென்னை : வங்கக்கடலில் இன்று புதிய புயல் சின்னம் உருவாகுவதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
-
மணீஷ் சிசோடியாவின் காவல் மேலும் நீட்டிப்பு
21 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவலை மே 31 வரை நீட்டித்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.இதே
-
தமிழ்நாட்டு மக்கள் மீது வீண் பழி சுமத்துவதா? - பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்
21 May 2024சென்னை : தமிழக மக்கள் மீது வீண் பழி சுமத்துவதா என்று கேள்வி எழுப்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டையும், தமிழர்களையும் அவதூறு செய்வதை பிரதமர் மோடி நிறுத்திக் கொள்ள
-
உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்: உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு
21 May 2024கோபி : ஜப்பானின் கோபியில் நடைபெற்று வரும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் உயரம் தாண்டுதல் T63 போட்டியில் மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
-
தமிழகத்திற்கு காவிரியில் இருந்து 2.5 டி.ம்.சி. நீரை திறக்க வேண்டும் : கர்நாடக அரசுக்கு மேலாண்மை ஆணையம் உத்தரவு
21 May 2024டெல்லி : தமிழ்நாட்டுக்கு காவிரியில் 2.5 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கர்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
மக்களுடன் முதல்வர் திட்டம்: 2வது கட்டம் ஜூலையில் தொடக்கம்
21 May 2024சென்னை மக்களுடன் முதல்வர் திட்டத்தின் 2வது கட்டம் வரும் ஜூலை மாதம் தொடங்கவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
கர்நாடகத்தில் துணை நடிகை கொலை: தலைமறைவான கணவருக்கு வலைவீச்சு
21 May 2024மைசூரு, கர்நாடகத்தில் துணை நடிகை கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாகியுள்ள வித்யாவின் கணவர் நந்தீஷை போலீசார் தேடி வருகின்றனர்.
-
மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு: வெளியே தெரியும் நந்தி சிலை
21 May 2024சேலம் : மேட்டூர் அணையின் நீர்மட்டம் 49 அடியாக சரிந்ததால் நீர் தேக்கப் பகுதியில் மூழ்கி இருந்த நந்தி சிலை முழுவதும் வெளியே தெரிகிறது.
-
மக்கள் அச்சமில்லாமல் பயணிக்க உடனடியாக புதிய பேருந்துகளை தமிழ்நாடு அரசு வாங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
21 May 2024சென்னை, மக்கள் அச்சமில்லாமல் பயணிக்க உடனடியாக புதிய பேருந்துகளை தமிழ்நாடு அரசு வாங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
தொடர் கனமழை காரணமாக தமிழ்நாட்டில் 11 பேர் பலி
21 May 2024சென்னை : தமிழ்நாட்டில் கனமழை காரணமாக 4 நாட்களில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக பேரிடர் மேலாண்மைத்துறை தெரிவித்துள்ளது.
-
காலில் தசை நார் வலி: அறுவை சிகிச்சை செய்ய விரைவில் லண்டன் செல்கிறார் எம்.எஸ்.டோனி?
21 May 2024சென்னை : காலில் அறுவை சிகிச்சை செய்ய டோனி லண்டன் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை தோல்வி...
-
பீகாரில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறையில் ஒருவர் கொலை : இணையதள சேவை துண்டிப்பு
21 May 2024பாட்னா : பீகாரின் சரண் மாவட்டத்தில் தேர்தலுக்கு பின் ஏற்பட்ட வன்முறையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார், 3 பேர் படுகாயமடைந்தனர்.
-
பூரி ஜெகன்நாதர் பற்றி பேச்சு: வருத்தம் தெரிவித்த பா.ஜ., வேட்பாளர் சம்பித் பத்ரா
21 May 2024புவனேஸ்வர், பூரி ஜெகன்நாதர் பற்றிய தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்து 3 நாட்கள் விரதம் இருக்கப் போவதாக பா.ஜனதா வேட்பாளர் சம்பித் பத்ரா தெரிவித்துள்ளார்.
-
மம்தா குறித்து சர்ச்சை கருத்து: பா.ஜ.க. வேட்பாளர் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை
21 May 2024புதுடெல்லி : தேர்தல் பிரச்சாரத்தின் போது மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குறித்து அவதூறாக பேசிய டம்லுக் தொகுதியின் பாஜக வேட்பாளரான முன்னாள் நீதிபதி அபிஜித் கங்கோபா
-
உக்ரைன் மீது அணு ஆயுத தாக்குதல் ஒத்திகை: ரஷ்யா
22 May 2024மாஸ்கோ, உக்ரைன் மீது அணு ஆயுத தாக்குதல் ஒத்திகை துவங்கப்படும் என ரஷ்யா அறிவித்துள்ளது. இதனால் உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-05-2024.
22 May 2024 -
இஸ்ரேல் பிரதமருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்க அதிபர் ஜோபைடன் எதிர்ப்பு
22 May 2024வாஷிங்டன், இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கும் தென்னாப்பிரிக்காவின் கோரிக்கைக்கு அமெரிக்க அதிபர் ஜோபைடன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
-
வியட்நாமின் புதிய அதிபராக டோலாம் பதவியேற்றார்
22 May 2024ஹனோய், வியட்நாமின் புதிய அதிபராக அந்நாட்டின் பொது பாதுகாப்பு அமைச்சர் டோ லாம் நேற்று பதவியேற்றுக் கொண்டார்
-
விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் மறுப்பு: ஜாமின் கோரிய மனுவை திரும்ப பெற்றார் சோரன்
22 May 2024புது டெல்லி, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் இடைக்கால ஜாமின் கோரிய மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளதை தொடர்ந்து ஜாமின் மனுவை அவர்
-
காணாமல் போன வங்கதேச எம்.பி. அசீம் சடலமாக மீட்பு
22 May 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் மாயமான வங்கதேசம் எம்.பி. அன்வருல் அசீம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
-
வட மாநிலங்களில் வெப்ப அலை எதிரொலி: 5 நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுத்தது வானிலை மையம்
22 May 2024புது டெல்லி, வெப்ப அலை வீசுவதை தொடர்ந்து வட மாநிலங்களில் 5 நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் விடுத்துள்ளது.
-
மின் தேவையை சமாளிக்க 3,286 மி.யூ மின்சாரம் கொள்முதல்: தமிழ்நாடு மின்வாரியம் தகவல்
22 May 2024சென்னை : மழையால் மின் தேவை குறைந்திருந்தாலும் இந்த ஆண்டு கோடை வெப்பத்தின் போது மின் தேவையை சமாளிக்க, தமிழ்நாடு மின்வாரியம் 3,286 மில்லியன் யூனிட் மின்சாரத்தை குறுகிய கா
-
மே. வங்கத்தில் அரசியல் வன்முறை ஜனநாயகத்தை அழித்து விட்டது : மத்திய அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டு
22 May 2024கொல்கத்தா : மேற்குவங்கத்தில் அரசியல் வன்முறை கிட்டத்தட்ட ஜனநாயகத்தையே அழித்துவிட்டது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றஞ்சாட்டினார்.
-
வைகாசி விசாக திருவிழா: திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
22 May 2024திருச்செந்தூர், வைகாசி திருவிழாவையொட்டி திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர்.