முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விடைபெற்றார் மெஸ்சி

ஞாயிற்றுக்கிழமை, 8 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மில்கா சிங்கிற்கு அர்ப்பணிப்பு

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா அளித்த பேட்டியில் , ''நான் தங்கப் பதக்கத்தைப் பற்றி நினைக்கவில்லை. தனிப்பட்ட ரீதியாக எனது சிறப்பான ஆட்டத்தை வழங்குவேன் என்று நன்கு தெரியும். இந்தப் பதக்கத்தை தடகள நட்சத்திரம் மில்கா சிங்கிற்கு அர்ப்பணிக்கிறேன். தங்கம் வென்றது மகிழ்ச்சியாக உள்ளது.'' என்று தெரிவித்துள்ளார்.

_________

விடைபெற்றார் மெஸ்சி

34 வயது நிரம்பிய மெஸ்சி, பார்சிலோனா அணிக்காக 34 டிராபிகளையும் பெற்றுத் தந்துள்ளார். 6 முறை பலோன் டி ஓர்  விருதை வென்றுள்ளார். மெஸ்சியின் ஒப்பந்த காலம் முடிந்த நிலையில், அடுத்த சில வருடங்களுக்கு மெஸ்சியை தக்க வைத்து கொள்ள பார்சிலோனா கிளப் தயராக இருந்தது. இதற்கான ஒப்பந்தமும் தயாராகின. ஆனால் நிதி மற்றும் கட்டமைப்பு தடைகள் காரணமாக ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. 

இதனால் பார்சிலோனா அணிக்கான மெஸ்சியின் பயணம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில், மெஸ்சி நேற்று பார்சிலோனா கிளப்புக்கு சொந்தமான கேம் நவ் ஸ்டேடியத்தில் செய்தியாளர்களை சந்தித்தித்தார். அப்போது, பார்சிலோனா அணியில் இருந்து விலகுவதை உறுதி செய்தார். அணியில் இருந்து விலகுவதாக அவர் கூறியபோது கண்களில் கண்ணீர் பெருகியது.

___________

தமிழக வீராங்கனை ரேவதி 

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று தாயகம் திரும்பிய மதுரை வீராங்கனை ரேவதி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது., எனது நான்கு ஆண்டு கனவாக இருந்த ஒலிம்பிக் கனவு நிறைவேறியிருக்கிறது.

டோக்கியோவில் இந்தியாவிற்காக களமிறங்கும் போது எனது கண்களில் ஆனந்தக் கண்ணீரே வந்துவிட்டது. ஒலிம்பிக் போட்டியில் கலப்பு இரட்டையர் 400 மீட்டர் ஓட்டப்போட்டியில் பங்கேற்றது பெருமையாக இருந்தது. சிறிய தவறினால் பதக்க வாய்ப்பை தவற விட்டேன். இருப்பினும் தொடர்ந்து முயற்சி செய்து இந்தியாவுக்காக பதக்கம் பெற வேண்டும் என்பதே எனது லட்சியமாக இருக்கிறது என்றார்.

_________

ஆஸி.க்கு முதல் வெற்றி

வங்கதேசத்துக்கு எதிரான 4-ஆவது டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு இது முதல் வெற்றியாகும். 

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த வங்கதேசம் 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 19 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 105 ரன்கள் அடித்து வென்றது. ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்வெப்சன் ஆட்டநாயகன் ஆனார்.

__________

ஜூலை மாத சிறந்த வீரர்கள் 

ஜூலை மாதத்துக்கான சிறந்த கிரிக்கெட் வீரர்கள் பெயரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) பரிந்துரைத்துள்ளது. ஆடவர் கிரிக்கெட்டில் வங்கதேசத்திலிருந்து ஷகிப் அல் ஹசன், ஆஸ்திரேலியாவிலிருந்து மிட்செல் மார்ஷ் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளிலிருந்து ஹேடன் வால்ஷ் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். 

மகளிர் கிரிக்கெட்டிலிருந்து ஹேலே மேத்யூஸ் (மேற்கிந்தியத் தீவுகள்), ஃபாதிமா சனா (பாகிஸ்தான்) மற்றும் ஸ்டெஃபானி டெய்லர் (மேற்கிந்தியத் தீவுகள்) ஆகியோர் ஐசிசியால் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் யார் வெற்றியாளர்கள் என்பது அடுத்த வாரம் அறிவிக்கப்படவுள்ளது.

__________

ஏமாற்றமளிக்கிறது - புனியா

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் மல்யுத்த போட்டியில், 65 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார் இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா. இந்நிலையில் அவர், தான் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்ல முடியாமல் போனது ஏமாற்றம் அளிப்பதாக கூறியிருக்கிறார். 

2024ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல முயற்சிப்பேன் என்றும் அவர் கூறினார். மேலும், "ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதற்காக பிரார்த்தனை, அன்பு மற்றும் ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன்" என்று கூறினார்.

____________

நீரஜ் சோப்ரா: பி.டி.உஷா பெருமிதம்

தமது 37 ஆண்டுகால கனவை நீரஜ் சோப்ரா நிறைவேற்றியுள்ளதாக, இந்தியாவின் தங்க மகள் என போற்றப்படும் என முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், 37 ஆண்டுகளுக்கு முன்பு நிவர்த்தி ஆகாத தமது கனவு தற்போது நனவாகியுள்ளதாக  தெரிவித்துள்ளார். 'நன்றி மகனே' என்றும் மனமுருக அவர் பதிவிட்டுள்ளார்.

1984 லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் நூல் இழையில் பதக்கத்தை பிடி உஷா தவறவிட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல், துப்பாக்கி சுடுதல் போட்டியில் தனி நபர் பிரிவில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ராவும், தனது ட்விட்டர் பக்கத்தில் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

___________

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து