முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை கலெக்டர் மீதான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

வெள்ளிக்கிழமை, 8 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஏப். - 8  - மதுரை கலெக்டர் சகாயத்தை நீக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கு மீதான விசாரணை நேற்று முடிவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழு தலைவி சத்தியவாணி என்பவர் மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம் மீது குற்றம் சுமத்தி சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அவர் அந்த மனுவில் கூறி இருந்ததாவது: மதுரையில் ஒரு கல்லூரி விழாவில் பேசிய மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம், தேர்தல் மூலம் ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்று பேசியதாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது. எனவே, கலெக்டர் சகாயத்தை மாவட்ட தேர்தல் அதிகாரி பொறுப்பில் இருந்து nullநீக்கி நடவடிக்கை எடுக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அவர் மனுவில் கூறி இருந்தார்.

இந்த வழக்கு விசாரணை தலைமை nullநீதிபதி எம்.ஒய்.இக்பால், nullநீதிபதி சிவஞானம் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்பு நடந்தது. அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம் தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் எதுவும் பேசவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதோடு கலெக்டர் சகாயம் விழாவில் பேசிய பேச்சு அடங்கிய சி.டி. யும் கொடுக்கப்பட்டது. 

நேற்று (வியாழன்) இந்த வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் மீண்டும் எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது கலெக்டர் சகாயத்துக்கு ஆதரவாக வக்கீல் ரத்தினம் ஆஜராகி மனு கொடுத்தார். மதுரை தொண்டு நிறுவனங்கள் சார்பிலும் மனுக்கள் கொடுக்கப்பட்டன. அந்த மனுக்களில், மதுரை கலெக்டர் சகாயம் நேர்மையானவர். வாக்களிப்பது தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற தேர்தல் கமிஷனின் உத்தரவை ஏற்றுத்தான் மாணவர்கள் மத்தியில் பேசினார். அவர் மீது எந்த தவறும் இல்லை. எனவே அவருக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். 

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. 

இதையடுத்து nullநீதிபதிகள் இக்பால், சிவஞானம் ஆகியோர் கூறியதாவது:​மதுரை கலெக்டர் சகாயம் பேசிய சி.டி. தொகுப்பை நாங்கள் போட்டு பார்த்தோம். மனுதாரர் கூறுவது போல மதுரை கலெக்டர் எந்த இடத்திலும் பேசவில்லை. 100 சதவீதம் அனைவரும் வாக்களிக்க வேண்டும். பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும் என்று தான் கலெக்டர் பேசி உள்ளார். மாணவர் சமுதாயம் மூலம் இந்த மாற்றம் வர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் பத்திரிகைகளில் இந்த தகவல் வேறு மாதிரி வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தவறாது வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்திய மதுரை கலெக்டர் பெற்றோர்கள் பணம் பெறாமல் வாக்களிப்பதை மாணவர்கள் உறுதிபடுத்த வேண்டும் என்றும் கூறி உள்ளார். ஊழலற்ற சமுதாயம் உருவாக வேண்டும் என்ற நோக்கத்தில்தான் கலெக்டர் பேசி உள்ளார்.

இவ்வாறு nullநீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். பிறகு தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை அவர்கள் ஒத்தி வைத்தனர். ஓரிரு நாளில் தீர்ப்பு வெளியாகும் என்று தெரிகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்