முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

குடல் வறுவல்

Cooking time in minutes: 
30
Ingredients: 

 

குடல் வறுவல் செய்யத் தேவையான பொருள்கள்;

  1. குடல் - 1/4 கிலோ.
  2. சின்ன வெங்காயம் -200 கிராம்.
  3. தக்காளி - 2.
  4. பச்சை மிளகாய் - 3.
  5. நல்லெண்ணெய் - 50 மில்லி.
  6. கரம் மசாலா தூள் - 2 ஸ்பூன்.
  7. சீரகம் - 20 கிராம்.
  8. மிளகாய் வத்தல் -10.
  9. மல்லி - 50 கிராம்.
  10. மிளகு - 10 கிராம்.
  11. சோம்பு - 5 கிராம்.
  12. கசகசா - 10 கிராம்.
  13. பூண்டு -10 பல்.
  14. இஞ்சி - சிறிதளவு.
  15. உப்பு - தேவையான அளவு.
  16. கொத்தமல்லி -1 கைப்பிடி.
  17. தேங்காய் - 1/2 மூடி.
  18. மிளகாய்த்தூள்  -1 ஸ்பூன்.
Method: 

 

செய்முறை ; 

  1. 10 மிளகாய் வத்தலை எடுத்து மிக்சியில் போட்டு பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
  2. மல்லி 50 கிராம் எடுத்து அதையும் நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
  3. சீரகம் 20 கிராம்,கசகசா 10 கிராம்,மிளகு 10 கிராம், இதனுடன் சோம்பு 5 கிராம் போட்டு பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
  4. சின்ன வெங்காயம் 100 கிராம் எடுத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிக்சியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  5. பூண்டு 10 பல், மற்றும் இஞ்சி சிறிதளவு எடுத்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  6. கொத்தமல்லி சிறிதளவு  மற்றும் பச்சை மிளகாய் 2 எடுத்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  7. 1/2 மூடிதேங்காய்யை எடுத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிக்சியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  8. சுத்தம் செய்த குடலை ஒரு பாத்திரத்தில் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைக்கவும்.
  9. அடுப்பில் கடாய் வைத்து 50 மில்லி நல்லெண்ணெய் ற்றவும்.
  10. எண்ணெய் சூடானவுடன் பொடியாக நறுக்கிய 100 கிராம்,சின்ன வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
  11. இதனுடன் 2 தக்காளியை போட்டு வதக்கவும்.
  12. தேவையான அளவு உப்பு,மற்றும் பச்சை மிளகாய் ஒன்றை போட்டு வதக்கவும்.
  13. 2 ஸ்பூன் கரம் மசாலா தூள் மற்றும் 1 ஸ்பூன் மிளகாய்த்தூள் போட்டு வதக்கவும்.
  14. இதனுடன் மிக்சியில் அரைத்து வைத்த சின்ன வெங்காயம்,பச்சை மிளகாய் பூண்டு இஞ்சி  விழுதை சேர்த்து வதக்கவும்.
  15. அரைத்து வைத்த மிளகாய் பொடி ,மல்லி பொடி மிளகு,சோம்பு,கசகசா, சீரகப்பொடி ஆகியவற்றையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  16. நன்றாக வதங்கிய பின்னர் வேக வைத்த குடலை சேர்த்து வதக்கவும்.
  17. குடலை வேக வைத்த தண்ணீர் 1 கப் ஊற்றி நன்றாக கலந்து விட்டு 5 நிமிடம் மூடி வேக விடவேண்டும்.
  18. அரைத்து வைத்த 1/2 மூடி தேங்காய் விழுதை சேர்த்து கலந்து விடவும்.
  19. சுவையான குடல் வறுவல் ரெடி.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 weeks ago