முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

மீன் குழம்பு

Cooking time in minutes: 
45
Ingredients: 

 

மீன் குழம்பு செய்யத் தேவையான பொருள்கள்;

  1. நெய் மீன் - 1/2 கிலோ.
  2. தனியா தூள் - 4 ஸ்பூன்.
  3. மிளகாய் தூள் - 2 ஸ்பூன்.
  4. சோம்பு - 1 ஸ்பூன்.
  5. சீரகம் - 25கிராம்.
  6. நல்லெண்ணெய் - 50 மில்லி
  7. வெந்தயம் - 1 ஸ்பூன்.
  8. சின்ன வெங்காயம் 200 கிராம்.
  9. தக்காளி - 5
  10. பச்சை மிளகாய் – 4
  11. கல் உப்பு - தேவையான அளவு.
  12. தேங்காய் - 1/2 மூடி.
  13. கருவேப்பிலை,கொத்தமல்லி - சிறிதளவு.
  14. புளி - எலுமிச்சம் பழ அளவு.
  15. மிளகு - 10 கிராம்.
  16. பூண்டு – 11 பல்.
  17. ரிபைன்ட் ஆயில் - 2 ஸ்பூன். 

 

Method: 

 

 

மீன் குழம்பு செய்முறை ;

  1. 25 கிராம் சீரகத்தை எடுத்து மிக்சியில் போட்டு பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
  2. 10 மிளகையும்  பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
  3. சின்ன வெங்காயம் 5 மற்றும் பூண்டு 6 பல் இவை இரண்டையும் மிக்சியில் போட்டு நன்றாக  அரைத்துக்கொள்ளவும்.
  4. ஒரு பாத்திரத்தில் எலுமிச்சம் பழ அளவு புளியை போட்டு  தேவையான அளவு தண்ணீர் ஊற்றி புளிக் கரைசலை தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.
  5. அடுப்பில் கிடாய் வைத்து 2 ஸ்பூன் ரிபைன்ட் ஆயில் ஊற்றவும்.
  6. எண்ணெய் சூடானவுடன் 1 ஸ்பூன் சோம்பு, பொடியாக நறுக்கிய 50 கிராம் சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கிய 3 தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
  7. இதனுடன் 1 ஸ்பூன் சீரகத் தூள்,1 ஸ்பூன் மிளகுத் தூள் போட்டு நன்றாக வதக்கவும்.
  8. நன்றாக வதங்கிய பின் மிக்சியில் போட்டு  நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
  9. 1/2 மூடி தேங்காய்யை நறுக்கி மிக்சியில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
  10. அடுப்பில் பாத்திரத்தை வைத்து 50 மில்லி நல்லெண்னை உற்றவும்.
  11. எண்ணெய் சூடானவுடன் வெந்தயம் 1 ஸ்பூன், சோம்பு 1 ஸ்பூன், பச்சை மிளகாய் 4, பூண்டு 5 பல், மற்றும் சிறிதளவு  கருவேப்பிலை,கொத்தமல்லி சேர்த்து நன்றாக வதக்கவும்.
  12. பொடியாக நறுக்கிய 100 கிராம் சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
  13. பொடியாக நறுக்கிய 2 தக்காளி மற்றும் தேவையான அளவு கல் உப்பு போட்டு வதக்கவும்.
  14. 1/2 டீஸ்பூன் சீரகத் தூள்,1/2 டீஸ்பூன் மிளகுத் தூள் போட்டு நன்றாக வதக்கவும்.
  15. இதனுடன் மிக்சியில் அரைத்து வைத்த சின்ன வெங்காயம்,பச்சை மிளகாய் பூண்டு  ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
  16. மிளகாய் தூள் 2 ஸ்பூன்,தனியா தூள் 3 ஸ்பூன்,சேர்த்து வதக்கவும்.
  17. கரைத்து வைத்துள்ள புளி கரைசலை ஊற்றி கலந்து விட்டு 10
  18. நிமிடம் குழம்பை கொதிக்க வைக்க வேண்டும்.
  19. பிறகு அரைத்து வைத்துள்ள 1/2 மூடி தேங்காய் விழுதை போட்டு கலந்து விடவும்.
  20. இதனுடன் நன்றாக கழுவி வைத்த 1/2 கிலோ நெய் மீனை போட்டு 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
  21. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  22. சுவையான மீன் குழம்பு ரெடி.      

 

 

 

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 weeks ago