முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாண்டியாவில் பந்த்: கர்நாடகா செல்லும் பஸ்கள் நிறுத்தம்

வியாழக்கிழமை, 6 டிசம்பர் 2012      இந்தியா
Image Unavailable

ஈரோடு,டிச.7- கர்நாடக மாண்டியாவில் பந்த் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் இருந்து கர்நாடகா செல்லும் பஸ் கள் லாரிகள் நிறுத்தம். பல கோடி பொருட்கள் தேக்கம்.இருந்து காவிரி அணையில் தமிழ் நாட்டிற்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்திரவிட்டுள்ளது. இதை எதிர்த்து கர்நாடக மாநில அரசியல் கட்சிகள்  மற்றும் அங்குள்ள விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  கர்நாடக எதிர்கட்சிகள்தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டால்  கர்நாடாவில் சட்டம் ஒழுங்கு சீர்குழைவு ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் தமிழ் நாட்டில் கர்நாடகாவைகண்டித்து பல இடங்களில் அரசியல்கட்சிகளும் பல்வேறுஅமைப்புகளும்  எதிர்ப்பு ம் போராட்டங்களும் நடத்தி வருகின்றன. இந்நிலையில்   கர்நாடக மாநிலத்தில் உள்ள மாண்டியாவில் நேற்று பந்த் அறிவிக்கப்பட்டிருந்தது.  இதன் காரணமாக  பதட்டம் ஏற்பட்டதால் ஈரோடு மாவட்டத்திலிருந்து  கர்நாடாக செல்லும் பஸ்கள்,லாரிகள் நேற்று காலை முதல் நிறுத்தப்பட்டுள்ளது.  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திலிருந்து ஆசனூர்,தாளவாடி வழியாக கர்நாடாக மாநிலம் சாம்ராஜ் நகர் மைசூர்  மற்றும் பெங்களூருக்கு தினசரி 21 பஸ்கள் இயக்கப்படுகிறது .கர்நாடக மாண்டியாவில் பந்த் காரணமாக நேற்று முதல் இந்த பஸ்கள் இயக்கப்படவில்லை. சில பஸ்கள் தமிழக -கர்நாடக எல்லையான புனிஞ்சூர் வரை சென்று திரும்பி விடுகிறது.  மேலும் ஈரோடு மாவட்டத்திலிருந்து திம்பம்-ஆசனூர்  வனப்பகுதி வழியாகதினசரி செல்லும் ஆயிரக்கணக்கான சரக்கு லாரிகள்வேன்கள் கடந்த புதன் (5-12-12) நள்ளிரவு முதல்  நிறுத்தப்படுள்ளது.  ஈரோடு மாவட்டத்திலிருந்து கர்நாடாகவுக்கு 2500 லாரிகள் செல்லுகிறது. இந்த லாரிகள் நேற்று முதல் சத்தியமங்கலத்தை அடுத்தபண்ணாரி செக்போஸ்டில் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளது.  ஈரோடு மாவட்டத்திலிருந்து மஞ்சள்,ஜவுளி, எண்ணைவித்துகள்,காய்கறிகள் போன்றவை  கர்நாடகம் மற்றும் வட மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது . 2500 லாரிகள் இயங்காத காரணத்தினால்  பல கோடி மதிப்புள்ளபொருட்கள் தேக்கம் அடைந்துள்ளது.மேலும் கர்நாடக மாண்டியாவில் பந்த் காரணமாக கர்நாடகாவில் இருந்து தமிழ் நாட்டிற்கு வரும் லாரிகளும் , ஈரோடு மாவட்டத்திற்கு வரும் 18 பஸ்களும் நேற்று முதல் நிறுத்தப்படுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்