முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சிக்கன் சாப்ஸ்.

Cooking time in minutes: 
30
Ingredients: 

சிக்கன் சாப்ஸ் செய்யத் தேவையான பொருள்கள்;

  1. சிக்கன் 1/2 கிலோ.
  2. பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 4.
  3. மஞ்சள் தூள் - 1 சிட்டிகை.
  4. பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, மல்லி  - சிறிதளவு.
  5. பொடியாக நறுக்கிய தக்காளி - 2.
  6. நறுக்கிய பச்சை மிளகாய் - 4.
  7. இஞ்சி,பூண்டு விழுது - 2 ஸ்பூன்.
  8. கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்.
  9. மல்லி தூள் – 2 டேபிள்  ஸ்பூன்.
  10. சீரகம் - 1/2 ஸ்பூன்.
  11. சோம்பு - 1/2 ஸ்பூன்.
  12. ஏலக்காய் - 4.
  13. கிராம்பு - 4.
  14. ஜாதிபத்திரி -4.
  15. பட்டை - 2.
  16. தேங்காய் - 1/2 மூடி.
  17. உப்பு  - தேவையான அளவு.
  18. ரிபைன்ட் ஆயில் - தேவையான அளவு.
  19. மிளகாய் தூள் – 2 டேபிள்  ஸ்பூன்.
  20. சிக்கன் மசாலா- 4 ஸ்பூன்.
  21. மஞ்சள் தூள் - 1 சிட்டிகை.

Method: 

 

செய்முறை ;

  1. 1/2 மூடிதேங்காய்யை எடுத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிக்சியில் நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த 1/2 கிலோ சிக்கனை போட்டு, சிறிதளவு இஞ்சி பூண்டு விழுது, சிறிதளவு மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு  உப்பு போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
  3. அடுப்பில் கடாய் வைத்து தேவையான அளவு  ரிபைன்ட்ஆயில் ற்றவும்.
  4. எண்ணெய் சூடானவுடன் மசால் கலந்து ஊற வைத்த சிக்கனை ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு வறுக்கவும்.
  5. திருப்பி போட்டு நன்றாக வறுக்கவும். நன்றாக பொரிந்து விட்டது எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
  6. அடுப்பில் குக்கர் வைத்து தேவையான அளவு  ரிபைன்ட் ஆயில் ஊற்றவும்.
  7. எண்ணெய் சூடானவுடன் பட்டை 2, ஏலக்காய் 4, கிராம்பு 4, போட்டு வதக்கவும்.
  8. சீரகம் 1/2 ஸ்பூன், ஒரு ஸ்பூன் இஞ்சி,பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் 4, மற்றும் தேவையான அளவு  உப்பு போட்டு நன்றாக வதக்கவும்.
  9. பொடியாக நறுக்கிய தக்காளி 2, நறுக்கிய 4 பச்சை மிளகாய்யை போட்டு நன்றாக வதக்கவும்.
  10. பொடியாக நறுக்கிய சிறிதளவு கறிவேப்பிலை மற்றும் சிறிதளவு மல்லியை போட்டு வதக்கவும்.
  11. இதனுடன் மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை,மிளகாய்த்தூள் ஒரு ஸ்பூன் போட்டு வதக்கவும்.
  12. கரம் மசாலா தூள் ஒரு ஸ்பூன்,மல்லி தூள் 2 டேபிள் ஸ்பூன், சிக்கன் மசாலா 4 ஸ்பூன் போட்டு  கிளறி விடவும்.
  13. சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து விட்டு, மூடி வைத்து மூடி 5 நிமிடங்கள் வேக விட வேண்டும்.
  14. அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து கலந்து விடவும்.
  15. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  16. சுவையான சிக்கன் சாப்ஸ் ரெடி.   

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 weeks ago