முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி. பட்ஜெட் கூட்டம் இன்று தொடங்குகிறது : பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2023      இந்தியா
Parliament 2022 12-06

Source: provided

புதுடெல்லி : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய பட்ஜெட் தாக்குல் செய்யப்படுவதற்கு ஒரு நாள் முன்பு, பாராளுமன்றத்தில் இன்று பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்யவிருக்கிறார். 

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு ஜன.31-இல் தொடங்கி பிப்ரவரி 13 வரை நடைபெறவுள்ளது. தொடக்க நாளில், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையாற்றவிருக்கிறார். அவரது உரையைத் தொடர்ந்து, பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்படவுள்ளது. இன்று 11 மணியளவில் பாராளுமன்றம் கூடுகிறது.

இந்த பொருளாதார ஆய்வறிக்கையானது இந்திய தலைமை பொருளாதார ஆலோசகர் (சிஇஏ) வி ஆனந்த நாகேஸ்வரன் அவரால் இன்று நடைபெறும் செய்தியாளர் சந்திப்பின் போது மக்களுக்கு வழங்கப்படவுள்ளது.

பொருளாதார ஆய்வறிக்கை என்பது நாட்டின் பொருளாதார நிலை குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை (ரிப்போர்ட் கார்டு). இது மத்திய நிதியமைச்சரால் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். நாட்டின் பொருளாதார நிலை எந்த நிலையில் இருக்கிறது என்பதை இந்த பொருளாதார ஆய்வறிக்கை விரிவாகக் கொண்டிருக்கும். பொருளாதார ஆய்வு, தேவையான சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்த துறைசார் கண்ணோட்டங்கள், கருத்துகளை கொண்டிருக்கும். 2023-24ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட், நாளை (பிப்ரவரி 1-ல்) தாக்கல் செய்யப்படவுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றுவார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து