முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

கருவேப்பிலை குழம்பு.

Cooking time in minutes: 
20
Ingredients: 

 

கருவேப்பிலை குழம்பு செய்யத் தேவையான பொருள்கள்;

  1. கருவேப்பிள்ளை - 1 கப்.
  2. புளி - சிறிதளவு.
  3. கடலை பருப்பு -  2 ஸ்பூன்.
  4. முருங்கைக்காய் - 1.
  5. நெய் - 1 ஸ்பூன்.
  6. மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
  7. நல்லெண்ணெய் -   50 மில்லி
  8. மிளகாய் வத்தல் - 10.
  9. சீரகம் - 1 டீஸ்பூன்.
  10. சோம்பு - 1 டீஸ்பூன்.
  11. மிளகு -  1 டீஸ்பூன்.
  12. மல்லி -  1 டீஸ்பூன்.
  13. பூண்டு -  13  பல்.
  14. கடுகு,உளுந்து - 1/2 டீஸ்பூன்.
  15. எலுமிச்சை சாறு - 1/2 மூடி.
Method: 

செய்முறை ;

  1. ஒரு பாத்திரத்தை எடுத்து சிறிதளவு புளியை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து ஒரு கப் புளிக்கரைசலை தயார் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  2. அடுப்பில் கடாய் வைத்து ஒரு  ஸ்பூன் நெய்யை  ஊற்றவும்.நெய் சூடானவுடன் 1 கப் கருவேப்பிள்ளையை போட்டு நன்றாக வதக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  3. அடுப்பில் கடாய் வைத்து ஒரு  ஸ்பூன் சிறிதளவு நல்லெண்ணெய்யை ஊற்றவும்.எண்ணெய் சூடானவுடன் 10 மிளகாய் வத்தலை  போட்டு நன்றாக வதக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  4. கடாயில் 1 ஸ்பூன் சீரகம்,1 ஸ்பூன் சோம்பு போட்டு வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  5. கடாயில் 1 ஸ்பூன் மிளகு  போட்டு வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  6. கடாயில் 1/2 டீஸ்பூன் நல்லெண்ணெய்யை  ஊற்றவும், எண்ணெய் சூடானவுடன் 5 பல் பூண்டு  போட்டு நன்றாக வதக்கவும்,இதனுடன் 2 ஸ்பூன் கடலை பருப்பை போட்டு வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  7. வறுத்த  கருவேப்பிள்ளை,மிளகாய் வத்தல்,சீரகம்,சோம்பு,மிளகு, பூண்டு,கடலை பருப்பு ஆகியவற்றை சிறிது நேரம் ஆற விட்டு ஒரு மிக்சி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
  8. அடுப்பில் கடாய் வைத்து 25 மில்லி நல்லெண்ணெய்யை ஊற்றவும்.எண்ணெய் சூடானவுடன் 1 டீஸ்பூன் கடுகு,உளுந்து போட்டு வதக்கவும்,இதனுடன் 8 பூண்டு பல் போட்டு வதக்கவும்.
  9. இதனுடன் நறுக்கிய 1 முருங்கைக்காய்யை போட்டு வதக்கவும்.
  10. இதனுடன் மிக்சி ஜாரில் அரைத்த விழுதுகளை போட்டு கிளறி விடவும்.
  11. இதனுடன் ஒரு டம்ளர்  தண்ணீர் ஊற்றி,தேவையான அளவு உப்பு போட்டு கலந்து  விட்டு  கடாய்யை மூடி போட்டு மூடி  குழம்பை  வேக விடவும்.
  12. கரைத்து வைத்துள்ள ஒரு கப் புளிக்கரைசலை ஊற்றி கலந்து விட்டு கடாய்யை மூடி போட்டு மூடி  குழம்பை  சிறிது நேரம் கொதிக்க வைக்கவும்.
  13. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  14. இதில் 1/2 மூடி எலுமிச்சை பழ சாறை பிழிந்து விடவும்.
  15. சுவையான கருவேப்பிலை குழம்பு ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 weeks ago