முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

முருங்கைக்கீரை சாம்பார்

Cooking time in minutes: 
20
Ingredients: 

முருங்கைக்கீரை சாம்பார் செய்யத் தேவையான பொருள்கள்;

  1. முருங்கைக்கீரை - 1 கட்டு.
  2. துவரம் பருப்பு - 100 கிராம்.
  3. பொடியா நறுக்கிய  வெங்காயம் - 50 கிராம்
  4. பொடியா நறுக்கிய தக்காளி -  1.
  5. பச்சை மிளகாய் - 2.
  6. எண்ணெய் - 3 டீஸ்பூன்.
  7. சாம்பார் பொடி - 1/2 டீஸ்பூன். 
  8. கடுகு,உளுந்து -  1/2 ஸ்பூன். 
  9. சீரகம் - 1/2 ஸ்பூன்.
  10. கறிவேப்பிலை - 10 இலைகள். 
  11. பெருங்காயத்தூள் - 1/4 ஸ்பூன்.
  12. மல்லி இலை - சிறிதளவு.
  13. உப்பு - தேவையான  அளவு.
  14. மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன். 
  15. சீரகத்தூள் -  1/4 டீஸ்பூன். 
  16. தனி மிளகாய்தூள் - 1/4 டீஸ்பூன். 
  17. புளி – சிறிதளவு.
Method: 

செய்முறை ;

  1. ஒரு பாத்திரத்தை எடுத்து சிறிதளவு புளியை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து ஒரு கப் புளிக்கரைசலை தயார் செய்து எடுத்து வைத்துக்கொள்ளவும். 
  2. அடுப்பில் குக்கரை வைத்து 100 கிராம் துவரம் பருப்பை  போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 2 விசில்  வரும்வரை வேக வைத்து இறக்கவும்.
  3. அடுப்பில் கடாய் வைத்து 3 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றவும்.
  4. எண்ணெய் சூடானவுடன்  1/2 ஸ்பூன் கடுகு,உளுந்து,1/2 ஸ்பூன் சீரகம்,10 கறிவேப்பிலை,சிறிதளவு மல்லி இலை,1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள் மற்றும் பொடியாக நறுக்கிய 50 கிராம் சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும்.
  5. நன்றாக வதங்கிய பின்னர்  2 பச்சை மிளகாய்,பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி மற்றும் சுத்தம் செய்த ஒரு கட்டு முருங்கைக் கீரையை போட்டு நன்றாக வதக்கவும்.
  6. இதனுடன் தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள் 1/4 ஸ்பூன்,சீரகத்தூள் 1/4 டீஸ்பூன்,சாம்பார் பொடி 1/2 டீஸ்பூன், தனி மிளகாய்தூள் 1/4 டீஸ்பூன் போட்டு நன்றாக கிளறி விடவும்.
  7. தயார் செய்து வைத்துள்ள ஒரு கப் புளிக்கரைசல் மற்றும் ஒரு கப் தண்ணீரை ஊற்றி கலந்து விட்டு குக்கரை மூடி 10 நிமிடம் கீரையை நன்றாக வேக வைக்கவும்.
  8. இதனுடன் குக்கரில் வேக வைத்த துவரம் பருப்யை போட்டு சாம்பாரை கொதிக்க வைக்கவும்.
  9. இப்போது அடுப்பில் இருந்து இறக்கவும்.
  10. சுவையான முருங்கைக்கீரை சாம்பார் ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 weeks ago