முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏர்இந்தியா விமானிகள் 5-வது நாளாக ஸ்டிரைக் விமான சேவைகள் பாதிப்பு

திங்கட்கிழமை, 2 மே 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, மே - 2 - ஏர் இந்தியா விமானிகள் நேற்று 5-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவை தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு, நிர்வாக சீர்திருத்தம் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஏர் இந்தியா விமானிகள் கடந்த 5 நாட்களுக்கு முன்று வேலை நிறுத்தத்தை தொடங்கினர். இந்த வேலை நிறுத்தத்திற்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு விமானிகள் அனைவரும் பணிக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் அதை பொருட்படுத்தாமல் விமானிகள் தொடர்ந்து வேலை நிறுத்தம் செய்தனர். இந்த வேலை நிறுத்தத்தினால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால் பயணிகள் பெரிதும் இன்னலுக்கு ஆளானார்கள். 70 க்கும் மேற்பட்ட ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ரத்து செய்யப்பட்ட விமானங்களில் டிக்கெட் புக் செய்திருந்தவர்கள் தனியார் மாற்று விமானங்களில் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று 5-வது நாளாக இந்த வேலைநிறுத்தம் நீடித்ததால் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய நகரங்களில் இருந்து புறப்படவேண்டிய ஏர் இந்தியா விமானங்கள் பெருமளவில் ரத்து செய்யப்பட்டன. விமானிகள் சங்கத்தினருடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் இந்த வேலை நிறுத்தம் தொடர்ந்து நீடிக்கும் என்று விமான ஓட்டிகள் சங்கத்தின் முக்கிய தலைவர்கள் கூறியுள்ளனர். தங்களது சங்கங்களை சேர்ந்த சுமார் 800 விமானிகள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதாக அவர்க தெரிவித்தனர். தங்களது கோரிக்கைகள் ஏற்கப்படும்வரை இந்த வேலை நிறுத்தம் நீடிக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இந்த போராட்டத்தினால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். இந்த 5 நாள் விமானிகள் போராட்டத்தால் ஏர் இந்தியாவுக்கு 35 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்