முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்தியில் 3-வது அணி ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை

சனிக்கிழமை, 8 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

மும்பை, ஜூன்.9  - மத்தியில் 3-வது அணி ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை என்று மத்திய உணவு அமைச்சர் சரத்பவார் கூறினார்.   இனிமேல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி  மீண்டும் ஆட்சிக்கு வராது என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதேபோல் பாஜக கூட்டணியும் ஆட்சி அமைப்பு சந்தேகம் என்றும்தெரியவந்துள்ளது.

இதற்கிடையே திரிணாமுல், பிஜூஜனதாதளம், சமாஜ்வாடி, அதிமுக போன்ற மாநில கட்சிதள் தங்களது பலத்தை நிரூபித்து வருகின்றன. இந்த கட்சிகள் ஒன்று சேர்ந்து 3-வது அணி அமைத்து மத்தியில் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.  இதற்கான முயற்சியில் ஈடுபடுவேன் என்று அண்மையில் 

தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கூறினார்.

பொதுத் தேர்தலுக்குப் பிறகு 3-வது அணி அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. ஆனால் மத்தியில் 3-வது அணி ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை என்று சரத்பவார் கூறினார். மும்பையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

 மத்தியில் 3-வது அணி ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை. காங்கிரஸ் , பாஜக ஆதரவு இல்லாமல் மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது. பிரதமர் பதவிக்கு நான் ஆசைப்படவில்லை. மராட்டிய மாநிலத்தில் 22 தொகுதிகளில் போட்டியிட்டு 8 அல்லது 9 தொகுதிகளில் வெற்றிபெற்று வருகிறோம். இந்நிலையில் பிரதமராகும் கனவு எனக்கு துளி கூட இல்லை.  காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பது அந்த கட்சியின் உள் விவகாரமாகும் என்று சரத்பவார் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்