முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சிக்கன் லெக் பீஸ் ப்ரை

Cooking time in minutes: 
20
Ingredients: 

 

சிக்கன் லெக் பீஸ் ப்ரை செய்யத் தேவையான பொருட்கள்.

  1. சிக்கன் லெக் பீஸ் – 7.
  2. பால் - 1/4 லிட்டர்.
  3. பூண்டு - 2 பல்.
  4. மிளகு தூள் - 2 ஸ்பூன்.
  5. முட்டை - 2.
  6. பிரட் கிரம்ஸ் - 150 கிராம்.
  7. மைதா மாவு - 150 கிராம்.
  8. சில்லி பிளக்ஸ் - ஒரு ஸ்பூன்.
  9. கஸ்தூரி மேத்தி - ஒரு ஸ்பூன்.
  10. மிளகாய் தூள் - 2 ஸ்பூன்.
  11. சோம்பு தூள் - ஒரு ஸ்பூன்.
  12. இஞ்சி பொடி - 2 ஸ்பூன்.
  13. எண்ணெய் - 1/2 லிட்டர்.
  14. உப்பு - தேவையான அளவு.

 

Method: 

செய்முறை ;--

  1. ஒரு கடாயில் 7 சிக்கன் லெக் பீஸ் எடுத்துக்கொள்ளவும்.
  2. இதில்  1/4 லிட்டர் பால்,ஒரு டம்ளர் தண்ணீர்,2 பல் பூண்டு,மிளகு தூள் ஒரு ஸ்பூன் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை போட்டு நன்றாக கலந்து விட்டு சிக்கனை  5 நிமிடங்கள் சிக்கனை ஊற வைக்கவும்.
  3. 5 நிமிடங்கள் கழித்து  கடாயை அடுப்பில் வைத்து மூடிபோட்டு மூடி லெக் பீஸ் சிக்கனை  20 நிமிடங்கள் வேக வைத்து லெக் பீஸ் சிக்கனை ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  4. 3 தட்டுகளை எடுத்துக் கொள்ளவும்,முதல் தட்டில் 2 முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
  5. இரண்டாவது தட்டில் 150 கிராம்  பிரட் கிரம்ஸ் எடுத்துக் கொள்ளவும்.
  6. மூன்றாவது தட்டில் 150 கிராம் மைதா மாவு,சில்லி பிளக்ஸ் ஒரு ஸ்பூன்,மிளகு தூள் ஒரு ஸ்பூன்,கஸ்தூரி மேத்தி ஒரு ஸ்பூன்,மிளகாய் தூள் 2 ஸ்பூன்,சோம்பு தூள் ஒரு ஸ்பூன்,இஞ்சி பொடி  2 ஸ்பூன் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
  7. தயார் செய்து வைத்துள்ள லெக் பீஸ் சிக்கனை கலந்து வைத்துள்ள மைதா மாவில் பிரட்டி எடுத்து பின்னர் முட்டை கலவையில் முக்கி எடுத்து பின்னர் பிரட் கிரம்ஸில் போட்டு லெக் பீஸ் சிக்கன் துண்டின்  எல்லா பக்கங்களிலும் பிரட் தூள்கள் ஒட்டும்படி பிரட்டி எடுத்து  தயார் செய்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  8. இதே போல் மீதம் உள்ள லெக் பீஸ் சிக்கன் துண்டுகளையும்  தயார் செய்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  9. அடுப்பில் கடாய்யை வைத்து 1/2 லிட்டர் எண்ணெய்யை ஊற்றவும்.
  10. எண்ணெய்  சூடானவுடன்  தயார் செய்து வைத்துள்ள லெக் பீஸ் சிக்கனை எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
  11. திருப்பி திருப்பி போட்டு நன்றாக பொரிக்கவும்.
  12. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  13. சுவையான சிக்கன் லெக் பீஸ் ப்ரை ரெடி.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago