முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சிக்கன் காளான் ஸ்ட்யு

Cooking time in minutes: 
20
Ingredients: 

சிக்கன் காளான் ஸ்ட்யு செய்யத் தேவையான பொருட்கள்.

  1. சிக்கன் - ஒரு கிலோ.
  2. காளான் - 250 கிராம்.
  3. பட்டர் - 2 ஸ்பூன்.
  4. மிளகு தூள் – 1 ஸ்பூன்.
  5. பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் -1.
  6. பொடியாக நறுக்கிய மல்லி இலை - சிறிதளவு.
  7. பிரியாணி இலை -1.
  8. கிராம்பு - 2.
  9. சோம்பு தூள் - 1/2 ஸ்பூன்.
  10. இஞ்சி பொடி - ஒரு ஸ்பூன்.
  11. கஸ்தூரி மேத்தி - 1/2 ஸ்பூன்.
  12. பொடியாக நறுக்கிய பூண்டு - 3 பல்.
  13. வினிகர் - ஒரு ஸ்பூன்.
  14. மைதா மாவு - 3 ஸ்பூன்.
  15. பிரெஷ் கிரீம் -200 கிராம்.
  16. உப்பு –தேவையான அளவு.
Method: 

செய்முறை ;--

  1. ஒரு பாத்திரத்தில் ஒரு கிலோ சுத்தம் செய்த சிக்கனை எடுத்துக்கொள்ளவும்.
  2. இதனுடன்  ஒரு ஸ்பூன் மிளகுத்தூள்,தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலந்து விட்டு  சிக்கனை 10  நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  3. அடுப்பில் கடாய் வைத்து 2 ஸ்பூன் பட்டரை போடவும்.
  4. பட்டர் நன்றாக உருகிய பின், மிளகுத்தூள் மற்றும் உப்பு போட்டு கலந்து ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை போட்டு  நன்றாக வேக வைக்கவும்.
  5. சிக்கனை திருப்பி திருப்பி நன்றாக வேக வைத்து தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
  6. கடாயில்  மீதமுள்ள உருகிய வெண்ணெயில் பொடியாக நறுக்கிய ஒரு  பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய மல்லி இலை சிறிதளவு போட்டு வதக்கவும்.
  7. இதனுடன் சுத்தம் செய்த 250 கிராம் காளான்,ஒருபிரியாணி இலை,கிராம்பு 2,சோம்பு தூள் 1/2 ஸ்பூன்,இஞ்சி பொடி ஒரு ஸ்பூன்,கஸ்தூரி மேத்தி 1/2 ஸ்பூன்,பொடியாக நறுக்கிய பூண்டு  3 பல்,ஒரு ஸ்பூன் வினிகர் மற்றும்  3 டம்ளர் தண்ணீர் ஊற்றி வதக்கவும்.
  8. இதனுடன்  3 ஸ்பூன் மைதா மாவு,மிளகு தூள்  1/2 ஸ்பூன்,தேவையான - அளவு உப்பு போட்டு நன்றாக கலந்து விடவும்.
  9. இதனுடன் பட்டரில் வறுத்து வைத்துள்ள சிக்கனை போட்டு நன்றாக கலந்து விட்டு கடாயை மூடிபோட்டு மூடி 5  நிமிடங்கள் சிக்கனை நன்றாக வேக வைக்கவும்.
  10. 5 நிமிடங்கள் கழித்து மூடியை திறந்து சிக்கன் துண்டுகளை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  11. இதனுடன் 200 கிராம் பிரெஷ் கிரீம் ஊற்றி நன்றாக கலந்து விட்டு, எடுத்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை போட்டு நன்றாக கலந்து விட்டு பொடியாக நறுக்கிய சிறிதளவு மல்லி இலையை  தூவி அடுப்பில் இருந்து கடாயை இறக்கி விடலாம்.
  12. சுவையான கிரீமி சிக்கன் ரெடி.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago