முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூபாய் மதிப்பு சரிவு: பெட்ரோல் விலை உயரும் அபாயம்?

புதன்கிழமை, 26 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, ஜூன். 27 - அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்தும் சரிவை சந்தித்து வருவதால் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயரக் கூடிய நிலை உருவாகியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது. இதனால் எண்ணெய் நிறுவனங்கள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கின்றன. தொடரும் ரூபாய் மதிப்பு சரிவு, கச்சா எண்ணெய் விலை உயர்வால் மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த வேண்டிய நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் இருக்கின்றன. தற்போது பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 3 முதல் ரூ. 5 வரை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் அனுமதி கேட்டுள்ளன. அது போல டீசல் விலையை லிட்டருக்கு 50 பைசா உயர்த்துவதற்கு பதில் மேலும் அதிகமாக உயர்த்த வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது. இதேபோல் சமையல் கியாஸ் விலையும் கணிசமான அளவுக்கு உயரக்கூடும். அனேகமாக வரும் ஜூலை 1 ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி விலை உயர்த்தப்பட்டால் பயணிகள், சரக்கு போக்குவரத்து கட்டணமும் மீண்டும் உயரலாம். காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்க்ள விலை உயரும் அபாயம் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்