முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

கத்திரிக்காய் ரோஸ்ட்

Cooking time in minutes: 
20
Ingredients: 

கத்திரிக்காய் ரோஸ்ட் செய்யத் தேவையான பொருட்கள்.

  1. பெரிய கத்திரிக்காய் – 2.
  2. முட்டை - 4.
  3. கார்ன் பிளவர் மாவு - 4 ஸ்பூன்.
  4. மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்.
  5. பிரட் கிராம்ஸ் - 150 கிராம்.
  6. எண்ணெய் – 1/2 லிட்டர்.
  7. உப்பு - 2 ஸ்பூன்.
Method: 

செய்முறை ;--

  1. 2 பெரிய கத்திரிக்காயை எடுத்து அதன் தோலை சீவி நீளமாக கீறிவிட்டு கத்திரிக்காய் தனி துண்டு துண்டாக வராமல் கொத்தாக இருக்கும் படி  நீள நீளமாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீரை எடுத்துக்கொள்ளவும்.அதில் 2 ஸ்பூன் உப்பு போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்,நிளமாக நறுக்கி கத்திரிக்காயை நீரில் போட்டு  15 நிமிடம் ஊற வைக்கவும்.
  3. ஒரு பாத்திரத்தில் 4 முட்டையை உடைத்து  ஊற்றவும்,இதனுடன் 4 ஸ்பூன் கார்ன் பிளவர் மாவு,மிளகாய் தூள் 1/2 ஸ்பூன் போட்டு நன்றாக கலந்து விட்டு தனியாக  எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  4. ஒரு தட்டில் 150 கிராம் பிரட் கிராம்சை எடுத்துக் கொள்ளவும்.
  5. ஊறவைத்துள்ள கத்திரிக்காயை கலந்து வைத்துள்ள முட்டை கலவையில் முக்கி எடுத்து பின்னர் பிரட் கிரம்ஸில் போட்டு கத்திரிக்காயின் எல்லா பக்கங்களிலும் பிரட் தூள்கள் ஒட்டும்படி உருட்டி தயார் செய்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  6. மீதம் உள்ள இன்னொரு  கத்திரிக்காயையும் இதே போல் தயார் செய்து  வைத்துக்கொள்ளவும்.
  7. அடுப்பில் கடாய் வைத்து 1/2 லிட்டர்  எண்ணெய்யை ஊற்றவும்.
  8. எண்ணெய்  சூடானவுடன் தயார் செய்து வைத்துள்ள கத்திரிக்காயை  ஓவ்வொன்றாக போட்டு பொரிக்கவும்.
  9. திருப்பி திருப்பி போட்டு நன்றாக பொறித்து எடுக்கவும்.
  10. சுவையான கத்திரிக்காய் ரோஸ்ட் ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 14 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 14 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 16 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 16 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 14 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 14 hours ago