முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்தில் 200 அடி மலையில் இருந்து உருளும் போட்டி

வெள்ளிக்கிழமை, 26 ஜூலை 2013      உலகம்
Image Unavailable

 

லண்டன், ஜூலை. 27 - இங்கிலாந்தில் மலையில் இருந்து உருளும் விநோதப் போட்டி நடத்தப்பட்டது. இங்கிலாந்தின் குளோவ் செஸ்டர் பகுதியில் உள்ள 'கூப்பர் ஹில்ா குன்று சுமார் 200 அடி உயரம் உடையது. எனவே, இந்தக் குன்று தான் போட்டிக்கான சரியான களம் என தேர்ந்தெடுத்துள்ளனர் போட்டியாளர்கள். மிகவும் ஆபத்தான போட்டியான இது, 1800 ம் ஆண்டுகளில் இருந்து விளையாடப் பட்டு வருகிறது. காயம் அடைபவர்களின் எண்ணிக்கை அதிகமானதால், கடந்த 2010 ம் ஆண்டு இந்தப் போட்டி தடை செய்யப் பட்டது.

அரசு தடை செய்த போதிலும், உருளும் போட்டியில் தீவிர ஆர்வம் கொண்ட மக்கள் கடந்த சில ஆண்டுகளாகத் தடையை மீறி திருட்டுத்தனமாக போட்டியை நடத்தி வருகிறார்களாம். சமீபத்தில் நடந்தப் போட்டியில் சுமார் நூறு பேர் கலந்து கொண்டனராம். இருபது பேர் கொண்ட குழுக்களாக 5 முறை இப்போட்டி நடத்தப்பட்டது. முதல் சுற்றில் 27 வயது அமெரிக்க வாலிபர் ஒருவரும், அடுத்தச் சுற்றில் ஆஸ்திரேலிய வீரர் ஒருவரும், மூன்றாவது சுற்றில் ஜப்பானியர் ஒருவரும் வெற்றி பெற்றனர்.

பெண்களுக்காக தனியே இரு பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது. அதில் முதல் சுற்றில் 16 வயது இளம்பெண் ஒருவர் வெற்றி பெற்றார். கடைசி பிரிவு போட்டியில் பலர் படுகாயம் அடைந்ததால் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்