முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோலி தொடக்க வீரராக விளையாடியது சரியே: டோனி

புதன்கிழமை, 29 ஜனவரி 2014      விளையாட்டு
Image Unavailable

     

ஹேமில்டன், ஜன.30 - நியூசிலாந்துக்கு எதிராக 4_வது ஒருநாள் போட்டியில் தோற்று இந்திய அணி தொடரரை இழந்தது. முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 278 ரன் குவித்தது. கேப்டன் டோனி ரோஹித் சர்மா தலா 79 ரன்னும், ஜடேஜா 62 ரன்னும் எடுத்தனர். 

பின்னர் விளையாடிய நியூசிலாந்து, 48.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 280 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றிபெற்றது. முன்னாள் கேப்டன் டெய்லர் சிறப்பாக ஆடி சதம் அடித்தார். அவர் 112 ரன்னும், லில்லியம்சன் 60 ரன்னும் எடுத்தனர். இந்த தோல்வியால் கேப்டன் டோனி பவுலர்கள் மீது பாய்ந்துள்ளார். வேகப்பந்து வீரர்கள் மூளையை பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பட்ட அவர் மேலும் கூறியதாவது:

வேகப்பந்து வீரர்களின் செயல்பாடு எனக்கு மிகவும் ஏமாற்றத்தை அளித்தது. நேர்த் தியாக பந்து வீசுவதற்குப் பதிலாக ரன்களை வாரி கொடுத்தார்கள். சுழற்பந்து வீரர்கள் சிறப்பாக வீசியபோது, அதை வேகப்பந்து வீரர்கள் சரியாகப் பயன்படு த்திக்கொள்ளவில்லை. விக்கெட்டை நோக்கி எப்படி வீச வேண்டும் என்பதை புரிந்து செயல்பட வேண்டும். இது மாதிரியான நேரத்தில் அவர்கள் மூளையைப் பயன்படுத்த வேண்டும். வீராட் கோலி தொடக்க வீராரக களம் இறங் கியது சரியான முடிவுதான்.

அவருடன் பேசியபோது நம்பிக்கையுடன் ஒப்புதல் அளித்த பிறகே தொடக்க வீரராக களம் இறக்கப்பட்டார்.  தொடக்க வீரராக அவர் விளையாட விரும்பியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.  இந்த தொடருக்கு மட்டும்தான் இந்த முடிவு. ரகானேவை தொடக்க வீர்ராக களம் இறக்கி இருக்கலாம் என்று கூறுவதை ஏற்க இயலாது.  அவர் மிடில் ஆர்டரில் விளையாட வேண்டும் என்பதுதான் தேர்வுக்குழுவினரின் விருப்பம். எதிர்கால நலனைக்கொண்டு அவர் மிடில் ஆர்டரில் ஆடுவது அவசியமானதாகும். மிடில் ஆ ர்டர் வரிசையில் அவர் சிறப்பாக உள்ளார். 20 ஓவர் போட்டியைவைத்து தொடக்க வீரரரக ஆட வைக்க வேண்டும் என்று கூறுவது சரியானதல்ல என்றார் டோனி.

இந்திய அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது மிகப்பெரிய சாதனை என்று நியூசிலாந்து கேப்டன் மேக்குல்லம் கூறினார்.

   

                                        

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்