முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாயாவதி அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்

செவ்வாய்க்கிழமை, 24 மே 2011      அரசியல்
Image Unavailable

லக்னோ, மே  24 - ஆர்ப்பாட்டங்கள், தர்ணா போராட்டங்களை நடத்துவதற்கு உத்தரபிரதேச அரசு விதித்த கட்டுப்பாட்டு உத்தரவுகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அம்மாநில  அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வர் மாயாவதி தலைமையில் பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இம்மாநிலத்தில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தின்போது சிலர் கொல்லப்பட்டனர். விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஆர்ப்பாட்டங்கள், தர்ணாக்கள் என்று நடைபெற்று வரும் இந்த போராட்டங்களுக்கு மாயாவதி அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து நைத்திக் என்ற கட்சி பொதுநலன் மனு ஒன்றை லக்னோ ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது. உத்தரபிரதேசத்தில் ஆர்ப்பாட்டங்கள் தர்ணாக்கள் போன்றவற்றை நடத்துவதற்கு உத்தரபிரதேச அரசு கடந்த ஏப்ரல் 27 ம் தேதி பிறப்பித்த கட்டுப்பாடுகள் சட்டவிரோதமானவை. அரசியல் சாசன விதிகளுக்கு எதிரானவை. எனவே உ.பி. அரசின் இந்த உத்தரவை திரும்பப் பெற உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்டங்கள் தர்ணாக்கள் நடத்துவது என்றால் அரசாங்கத்திடம் இருந்து எழுத்துப்பூர்வமான அனுமதியை பெற வேண்டும் என்ற அரசின் உத்தரவு அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று மனுதாரர் தரப்பில் வாதாடிய வக்கீல் சந்திரபூஷன் தெரிவித்தார். இந்த மனு மீது லக்னோ ஐகோர்ட் நீதிபதிகள் பிரதீப் காந்த், ரிதுராஜ் ஆவாஸ்தி ஆகியோர் விசாரணை நடத்தி இந்த மனு தொடர்பாக உரிய பதிலை அளிக்குமாறு  உத்தரபிரதேச அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும் இந்த மனு மீதான அடுத்த கட்ட விசாரணையை மே 27 ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்