முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேன்டிடேட்ஸ் சதுரங்கம்: 8-வது சுற்றில் ஆனந்த் டிரா

ஞாயிற்றுக்கிழமை, 23 மார்ச் 2014      விளையாட்டு
Image Unavailable

 

மாஸ்கோ, மார்ச். 24 - ரஷ்யாவில் நடந்து வரும் கேன்டிடேட்ஸ் சதுரங்கப் போட்டியின் 8_வது சுற்றில் இந்திய வீரர் ஆனந்த் டிரா செய்தார். 

2014 ம் ஆண்டுக்கான உலக செஸ் போட்டியில் நடப்பு சாம்பியன் நார்வேயின் மேக்னஸ் கார்ல்செனுடன் மோதப் போகும் வீரரை தேர்வு செய்வதற்கான தகுதி சுற்று போட்டி (கேன்டிடேட்ஸ் தொடர்) ரஷ்யாவின் கந்தி மான்சிஸ்க் நகரில் நடந்து வருகிறது. முன்னாள் உலக சாம்பியன் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் உள்பட 8 முன்னணி வீரர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்று வருகின்றனர். 

இதில் ஒவ்வொரு வீரரும் மற்ற வீரருடன் தலா இரு முறை மோத வேண்டும். 14 சுற்று முடிவில் முதலிடத்தை பிடிக்கும் வீரர் கார்ல்செனுடன் மோதும் வாய்ப்பை பெறுவார். 

இதன் 8 _வது சுற்று ஆட்டம் நேற்று முன் தினம் நடந்தது. இதில் ஆனந்த், அர்மேனிய வீரர் லெவோன் ஆரோனியனை சந்தித்தார். 

கறுப்பு நிற காயுடன் ஆடிய ஆனந்த் 19_வது நகர்த்தலில் டிரா செய்தார். இதுவரை 2 வெற்றியும், 6 டிராவும் கண்டுள்ள ஆனந்த், ஆரோனியனுடன் இணைந்து 5 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்